Published:Updated:

Chess Olympiad : 1924 டு 2022; தொடங்கிய வரலாறும்; வழங்கப்படும் பரிசுகளும்! - ஒரு பார்வை

Chess Olympiad Live Spot Visit

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் போட்டியில் கலந்து கொள்ளாததால், இந்தியாவை 6 அணிகள் அனுப்ப அனுமதியளித்துள்ளது செஸ் கூட்டமைப்பு

Chess Olympiad : 1924 டு 2022; தொடங்கிய வரலாறும்; வழங்கப்படும் பரிசுகளும்! - ஒரு பார்வை

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் போட்டியில் கலந்து கொள்ளாததால், இந்தியாவை 6 அணிகள் அனுப்ப அனுமதியளித்துள்ளது செஸ் கூட்டமைப்பு

Published:Updated:
Chess Olympiad Live Spot Visit
கடந்த ஒரு சில வாரங்களாக தமிழகம் முழுவதும் சதுரங்கமயமாகியுள்ளது. அடுத்த இரு வாரங்களும் இதே போலத்தான் இருக்க போகிறது. காரணம், உலக செஸ் அரங்கின் மிக முக்கிய தொடராக பார்க்கப்படும் செஸ் ஒலிம்பியாட் இன்றைய தினம் சென்னையில் தொடங்கயிருக்கிறது.

1924-ம் ஆண்டு செஸ் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டது. அம்முயற்சி தோல்வியில் முடியவே அந்த ஆண்டு ஒலிம்பிக் நடந்த அதே நேரத்தில் செஸ் விளையாட்டிற்கு தனியாக ஒலிம்பியாட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த முதல் தொடரில் உலகம் முழுவதும் சேர்த்து 16 நாடுகள் கலந்துகொண்டன. இத்தொடரின் முடிவில் தொடங்கப்பட்டதுதான் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE).

Chess Olympiad
Chess Olympiad

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு தன் முதல் ஒலிம்பியாட் போட்டியை 1927-ம் ஆண்டு லண்டனில் நடத்தியது. பிறகு 1950-ம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தொடரை அக்கூட்டமைப்பால் முடிவு செய்யப்பட்டது. நடப்பாண்டிற்கான ஒலிம்பியாட் தொடர் மாஸ்கோவில் நடைபெறவிருந்த நிலையில் போர் பதற்றநிலை காரணமாக இத்தொடர் இந்தியவிற்கு மாற்றப்பட்டது. நம் நாட்டில் நடைபெறவிருக்கும் முதல் ஒலிம்பியாட் போட்டி இதுவே. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் இத்தொடரில் சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். இதுவரை இல்லாத அளவில் 350 போட்டியாளர்கள் இந்தாண்டு இத்தொடரில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓப்பன் தொடர் மற்றும் மகளிர் தொடர் என இருப்பிரிவுகளாக நடைபெறும் இத்தொடரில் ஒரு பிரிவுக்கு ஒரு நாடு சார்பாக மூன்று அணிகள் பங்கேற்கலாம். மொத்தம் 6 அணிகளை ஒரு நாடு அனுப்பலாம். ஆனால் போட்டி நடத்தும் நாடு, ஒரு பிரிவிற்கு இரண்டு அணிகள்தான் அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இம்முறை சீனா, ரஷ்ய ஆகிய நாடுகள் போட்டியில் கலந்துகொள்ளாததால், இந்தியாவை 6 அணிகள் அனுப்ப அனுமதியளித்துள்ளது செஸ் கூட்டமைப்பு.

Chess Olympiad
Chess Olympiad
இந்திய ஓப்பன் பிரிவில் உள்ள மூன்று அணிகளில் உள்ள போட்டியாளர்களின் விவரங்கள்.

அணி 1

விதித் குஜராத்தி

பி ஹரிகிருஷ்ணா

அர்ஜூன் எரிகைசி

எஸ் எல் நாராயன்

சசிகரன் கிருஷ்ணன்

அணி 2

பிரக்ஞானந்தா

டி குகேஷ்

ஆர் அதிபன்

நிஹஸ் சரின்

ரௌனக் சத்வானி

அணி 3

சூர்யா சேகர் கங்குலி

எஸ் பி சேதுராமன்

அபிஜித் குப்தா

கார்த்திகேயன் முரளி

அபிமன்யு புரானிக்

இதில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் க்ராண்ட் மாஸ்டர் பதக்கம் வென்றவர்கள்.

இந்திய மகளிர் அணியில் உள்ள போட்டியாளர்களின் விவரங்கள்.

அணி 1

கோனெரு ஹம்பி

ஆர் வைஷாலி

டி ஹரிகா

தனியா சச்தேவ்

பக்தி குல்கர்னி

Chess Olympiad
Chess Olympiad

அணி 2

சௌமியா சுவாமிநாதன்

வனிக்தா அகர்வால்

மேரி அன் கோம்ஸ்

பத்மின் ரௌத்

திவ்யா தேஷ்முக்

அணி 3

ஈஷா கரவாடே

சாஹிதி வர்ஷினி

ப்ரத்யுஷா போதா

நந்திதா பி வி

விஷ்வா வாஸனவாலா

ஓப்பன் பிரிவில் வெற்றி பெரும் வீரருக்கு ஹாமில்டன்- ரஸல் கோப்பையும், மகளிர் பிரிவில் வெற்றி பெறுபவருக்கு விரா மென்சிக் கோப்பையும் வழங்கப்படும். இது தவிர சிறப்பாக விளையாடியவர்களுக்கு தங்கம், வெள்ளி, தாம்பர பதக்கங்களும் இருக்கின்றன. ஜூலை 29 இலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைப்பெறும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கவிருக்கின்றது. போட்டியின் துவக்கவிழா இன்று (ஜூலை 28) மாலை 7 மணிக்கு துவங்கவிருக்கின்றது.