Published:Updated:

`ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்; கோலி முதலிடம்!’- சஹாலின் `சேட்டை’ கமென்ட்

பந்துவீச்சில் கலக்கும் சஹாலுக்கு பேட்டிங் என்றாலே அலர்ஜி. அவரது பேட்டிங்கை இந்திய அணியில் பலர் கலாய்த்துள்ள நிலையில் தற்போது அவரே கலாய்த்துப் பதிவிட்டுள்ளார்.

சஹால்
சஹால்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால். ஐ.பி.எல் தொடரில் கவனம் பெற்று அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார். இந்திய அணியில் கலகலப்புக்குக் காரணமானவர் சஹால் என சக வீரர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். சஹால் டிவி என அவர் செய்யும் சேட்டைகள் எல்லாமே வைரல் ரகம்.

சஹால்
சஹால்

இந்திய வீரர்கள் யாராவது சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவிட்டால்போதும், முதல் ஆளாக ஆஜராகிவிடுவார் சஹால். தனது கமென்ட்களால் அன்றைய செய்திகளிலும் இடம் பிடித்திவிடுவார். இந்தமுறை அவர் கமென்ட் செய்தது ஐசிசியின் பதிவில்.

ஐசிசி நேற்று கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலியைத் தவிர்த்து புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

`ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப்  பட்டியல்; கோலி முதலிடம்!’- சஹாலின் `சேட்டை’ கமென்ட்

இதை ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தது. அதில் சஹால், ``ஏன் டாப் 10 ரேங்கிங் மட்டும் வெளியிட்டுள்ளீர்கள்? எனது பெயர் 11 -வது இடத்தில் உள்ளது என்ற காரணத்தினாலா?” என கமென்ட் செய்திருந்தார். பந்துவீச்சில் கலக்கும் சஹாலுக்கு பேட்டிங் என்றாலே அலர்ஜி. அவரது பேட்டிங்கை இந்திய அணியில் பலர் கலாய்த்துள்ள நிலையில் தற்போது அவரே கலாய்த்துப் பதிவிட்டுள்ளார்.