Published:Updated:

இந்தோனேசியா பேட்மின்டன்... வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பிய சிந்து!

இறுதிப் போட்டியில் சிந்துவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

பி.வி.சிந்து
பி.வி.சிந்து

இந்தோனேசியா ஓப்பன் பேட்மின்டன் போட்டி, ஜகர்த்தாவில் நடந்தது. இன்று நடந்த இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்துவும் ஜப்பானின் யமாகுஷியும் மோதினர். இதற்கு முன்பு, இவர்கள் இருவரும் 14 முறை மோதியுள்ளனர். இதில், சிந்து 10 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தார். யமாகுஷி 4 போட்டிகளில் வென்றுள்ளார். கடைசியாக இவர்கள் இருவரும் மோதிய 5 போட்டிகளில், சிந்து தொடர்ச்சியாக 4-ல் வென்றுள்ளார். எனவே, சிந்துவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

யமாகுஷி
யமாகுஷி

போட்டி ஆரம்பித்ததும் எல்லாம் தலைகீழாக மாறியது. போட்டியின் தொடக்கம் யமாகுஷி ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக ஆடிய யமாகுஷி, முதல் செட்டை 21- 15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பி.வி.சிந்து விளையாடினார். இதற்கெல்லாம் இடமளிக்காமல், இரண்டாவது செட்டையும் 21-16 என்ற கணக்கில் யமாகுஷி கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்து தங்கப்பதக்கம் வென்றார். இது அவருடைய நாளாக அமைந்துவிட்டது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.