Published:Updated:

2016-ல் 684…இப்போது உலகின் நம்பர் 7... பேட்மின்டனில் அடித்து நொறுக்கும் இந்த சிராக் - சாத்விக் யார்?

சிராக் - சாத்விக் இணை

மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, பயிற்சியில் ஈடுபட்டு, நம்பிக்கையோடு களமிறங்கிய பின் இந்த இணைக்கு வெற்றி மீது வெற்றிதான்.

2016-ல் 684…இப்போது உலகின் நம்பர் 7... பேட்மின்டனில் அடித்து நொறுக்கும் இந்த சிராக் - சாத்விக் யார்?

மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, பயிற்சியில் ஈடுபட்டு, நம்பிக்கையோடு களமிறங்கிய பின் இந்த இணைக்கு வெற்றி மீது வெற்றிதான்.

Published:Updated:
சிராக் - சாத்விக் இணை

கடந்த 2016-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த பேட்மின்டன் இரட்டையர் பிரிவு நிபுணர் கிம் ஹெர் எடுத்த ஒரு முடிவு இன்று இந்தியாவுக்குப் பெரும் பலனைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

சிராக் - சாத்விக் இணை
சிராக் - சாத்விக் இணை

அதுவரை சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டியும், சிராக் ஷெட்டியும் வெவ்வேறு வீரர்களோடு விளையாடிக்கொண்டிருந்தனர். இரட்டையர் பிரிவுக்குத் தேவையான கெமிஸ்ட்ரி அந்த இணைகளுக்குள் இல்லாமல் இருந்தது. அப்போதுதான் அந்த முடிவை எடுத்தார் ஹெர். ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இருவரையும் இணையச் செய்தார். அந்த ஒரு முடிவு இன்று இரட்டையர் பேட்மின்டன் அரங்கில் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருவரும் ஒன்றாக விளையாடுவதற்கு அவர்தம் விளையாட்டில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அந்த வீரர்கள் தங்களின் இயற்கையான ஆட்டத்தில் சில விஷயங்களை விட்டுக்கொடுக்கவேண்டியிருந்தது. அவர்கள் அதற்குத் தயாராகவே இருந்தார்கள். இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, பயிற்சியில் ஈடுபட்டு, நம்பிக்கையோடு களமிறங்கிய பின் இந்த இணைக்கு வெற்றிமீது வெற்றிதான். சாத்விக்கின் ஸ்மேஷ்கள் பலமாகவும் வேகமாவும் இருக்கும் என்பதால் சிராக் நெட்டில் விளையாடத் தொடங்கினார். இதுபோல் சில சின்னச் சின்ன மாற்றங்கள் அரங்கேற, உலக அரங்கில் மிரட்டக்கூடிய கூட்டணி ஒன்று உருவாகிவிட்டது.

சிராக் - சாத்விக் இணை
சிராக் - சாத்விக் இணை

ஆண்கள் இரட்டையர் உலக தரவரிசையில் முதல்முறையாக இந்திய இணை ஒன்று ஏழாம் இடம் வரை முன்னேறியுள்ளது. இதற்கு முன்பு டாப் 10 இடங்களுக்குள் வேறு எந்த இந்திய இணையும் நுழைந்ததில்லை. இதற்கு முன் இதே இணை ஆகஸ்ட் மாதத்தில் ஒன்பதாம் இடத்தைப் பிடித்தது. ஆனால் அது ஒரு வார காலம் மட்டுமே நிலைத்தது. அதற்குப் பின் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் முன்பை விட தற்போது இருவரும் பலமாகத் திரும்பியுள்ளனர். 2016 மார்ச்சில் ஒன்றாக விளையாடத் தொடங்கிய போது, 684-ம் இடத்தில் இருந்தவர்கள், மூன்றே வருடங்களில் ஏழாம் இடத்தை அடைந்துள்ளனர். சென்ற வருடம் நடந்த காமன்வெல்த் போட்டியில் 52 வருடங்கள் கழித்து, இந்தியாவுக்கு இரட்டையர் வெள்ளிப் பதக்கம் வென்றுகொடுத்து தேசத்தின் கவனத்தைப் பெற்றனர். மேலும், குழுப்பிரிவில் இந்தியா தங்கம் வெல்வதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தனர். அப்போதுதான் பெண்கள், பெண்கள் இரட்டையர், ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளில மட்டுமே கவனம் செலுத்திய இந்தியர்கள் ஆண்கள் இரட்டையர் பிரிவையும் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருடத்தை 16-ம் இடத்திலிருந்து தொடங்கிய சாத்விக் - சிராக் இணை, 14 போட்டிகளில் விளையாடி 60,650 புள்ளிகள் பெற்று ஏழாம் இடத்தை பெற்றுள்ளது. ஸ்விஸ் ஓப்பனில் காலிறுதி வரை சென்று, காமன்வெல்த் இறுதிப் போட்டியில் தோற்ற மார்கஸ் இல்லீஸ் - க்ரிஸ்லேங்கிரிட்ஜ் இணையிடம் மீண்டும் தோற்றனர். அதன்பிறகு, பிரேசில் இன்டர்நேஷ்னல் சேலஞ்சை வென்றது மட்டுமல்லாது டென்மார்க் ஓப்பனில் அரையிறுதி வரை பயணித்தனர்.

சிராக் - சாத்விக் இணை
சிராக் - சாத்விக் இணை

அதன்பின் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன், இந்தோனேஷிய ஓப்பன் மற்றும் ஜப்பான் ஓப்பனில் காலிறுதியைக் கூடத் தொடாத சாத்விக் - சிராக் இணை தாய்லாந்து ஓப்பனில் கம்பேக் கொடுத்து, சாம்பியன் பட்டம் வென்றது. இதில் சுவாரஸ்யமான செய்தி, இவர்களுக்கு எதிராக ஆடிய இணை, சீனாவைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன்கள் லீ-லியு இணை ஆகும். தற்போது லீ-லியு உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளனர். தாய்லாந்து ஓப்பனை வென்ற போது சாத்விக்-சிராக் ஒன்பதாம் இடத்தைப் பிடித்தனர். அதுவரை இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா, ஜூவாலா கட்டா - திஜூ இணைகள் மட்டுமே அதற்கு முன்பு டாப் டென்னுக்குள் நுழைந்திருக்கின்றன.

அக்டோபர் இறுதியில் நடந்த பிரெஞ்ச் ஓப்பனில் பல முன்னணி இணைகளுக்கு அதிர்ச்சியளித்தது இந்த இந்திய இணை. இரண்டாம் சுற்றில் இந்தோனேஷியாவின் அனுபவம் வாய்ந்த அசான் - சேடியாவான் இணையை வென்றது. மேலும், தற்போது ஆறாம் இடத்தில் இருக்கும் ஜப்பானின் என்டோ-யுடானபே இணையை 21-11, 25-23 என்ற நேர் செட் கணக்கில் வென்றது. இறுதிப்போட்டியில் `மினியன்ஸ்' என்று அழைக்கப்படும் இந்தோனேஷியாவின் கிடியான்-சுகமல்ஜூ இணையிடம் தோற்றது.

சிராக் - சாத்விக் இணை
சிராக் - சாத்விக் இணை

இதைத் தொடர்ந்து ஃபுஸோ ஓபனில் களமிறங்கிய சாத்விக்-சிராக் இணை இரண்டாம் சுற்றில் என்டோ-யுடானபே இணையையும் காலிறுதியில் லீ-லியு இணையையும் மீண்டும் வென்றது. ஆனால் அரையிறுதியில் மீண்டும் மினியன்ஸிடம் தோற்றது. அறையிறுதி வரை சென்றதால் அதிக புள்ளிகளைப் பெற்று மீண்டும ஏழாம் இடத்திற்கு முன்னேறியது. இவ்வளவு சாதனைகள் படைத்திருக்கும் இந்த இணையர்களின் வயது என்ன தெரியுமா? சாத்விக்கின் வயது 19; சிராக்கிற்கு 22 வயது. முதல் ஆறு இடங்களில் இருக்கும் இணைகளில் இரண்டு இணைகளை மட்டுமே சாத்விக் - சிராக் வென்றதில்லை. ஆனால் இதையும் ஒரு நாள் முறியடித்து மேலும் உலக தரவரிசையில் முன்னேறுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism