Published:Updated:

ஓலிம்பிக்: சாய்னா போராடி தோல்வி!

Vikatan Correspondent
ஓலிம்பிக்:  சாய்னா போராடி தோல்வி!
ஓலிம்பிக்: சாய்னா போராடி தோல்வி!

லண்டன்: ஒலிம்பிக் பேட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேஹ்வால், சீனா வீராங்கனையிடம் போராடி தோல்வி அடைந்தார்.

30வது ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த பேட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேஹ்வாலும், சீனா வீராங்கனை யிகான் வாங்குடன் மோதினார்.

ஓலிம்பிக்:  சாய்னா போராடி தோல்வி!

இதில் ஆரம்பம் முதலே சீனா வீராங்கனை யிகான் வாங் ஆதிக்கம் செலுத்தினார். இவரிடம் இந்திய வீராங்கனை சாய்னா கடுமையாக போராடினார். இதனால் முதல் செட்டை 21 -13 என்ற புள்ளி கணக்கில் சாய்னா இழந்தார்.

இதையடுத்து நடந்த இரண்டாவது செட்டில் சாய்னா ஆரம்பத்தில் முன்னிலை பெற்றார். ஆனால் அதன் பிறகு சீனா வீராங்கனை யிகான் வாங் பதிலடி கொடுத்தார்.

இறுதியில் இரண்டாவது செட்டிலும் சாய்னா 13-21 என்ற புள்ளிகணக்கில் சரணடைந்தார். இந்த வெற்றியால் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டு பதக்கமும் சீனாவிற்கு உறுதியாகியுள்ளது.

##~~##
சனிக்கிழமையன்று  நடைபெறும் வெண்கலம் பதக்கத்திற்கான போட்டியிலும் சாய்னா, சீனா வீராங்கனையுடன் மோதுகிறார்.
சாய்னாவின் இன்றைய தோல்வி, இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.