Published:Updated:

பேட்மின்டன்:இந்திய வீரர் காஷ்யப் வெற்றி!

பேட்மின்டன்:இந்திய வீரர் காஷ்யப் வெற்றி!
பேட்மின்டன்:இந்திய வீரர் காஷ்யப் வெற்றி!
பேட்மின்டன்:இந்திய வீரர் காஷ்யப் வெற்றி!

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர்   பிரிவில் இந்திய வீரர் காஷ்யப் வெற்றி பெற்று, காலிறுதி முந்தைய சுற்றுக்கு   முன்னேறியுள்ளார்.

30வது ஒலிம்பிக் போட்டி தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில்   பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்று போட்டி இன்று நடைபெற்றது.   இதில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப், வியட்நாள் வீரரை எதிர்த்து களமிறங்கினார்.

##~~##
முதல் சுற்றி சாதுர்யமாக விளையாடிய காஷ்யப், அந்த செட்டை 21-9 என்ற கணக்கில்   எளிதில் தனதாக்கினார். இரண்டாவது சுற்றில் வியாட்நாம் வீரர் சற்று போட்டியாக   அமைந்தாலும், காஷ்யப்பின் அதிரடி ஸ்மாஷ்கள் அவரை திணறடித்தார். இறுதியில்   காஷ்யப் இரண்டாவது செட்டை 21-14 என்ற செட் கணக்கில் வியாட்நாம் வீரரை நேர்   செட்டில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த போட்டியை தொடர்ந்து மகளிர் இரட்டையர் போட்டி நடைபெறுகிறது. இதில்   ஜுவாலா கட்டா ஜோடி பங்கேற்கிறது.