Published:Updated:

இந்தோனேஷிய பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா, காஷியாப்!

இந்தோனேஷிய பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா, காஷியாப்!
இந்தோனேஷிய பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா, காஷியாப்!
இந்தோனேஷிய பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா, காஷியாப்!

ஜகர்தா: இந்தோனேஷிய பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் விளையாட இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வாலும், ஆண்கள் பிரிவில் காஷியாப்பும் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவாலும், 3-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷிஸியான் வாங்கும் பலப்பரீட்சை நடத்தினர்.
 
சாய்னாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்ததால் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இருந்தது. சீனா வீராங்கனை எல்லா வகையிலும் போராட்டம் கொடுத்ததால் இந்த ஆட்டம் நீண்ட நேரம் நீடித்தது.

மூன்று செட் வரை நகர்ந்த திரிலிங்கான இந்த மோதலில் சாய்னா 21-17, 21-23, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றிக்காக சாய்னா 1 மணி 36 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.
 
இந்தோனேஷிய பேட்மிண்டனில் 2 முறை சாம்பியனான சாய்னா, அரையிறுதியில் கொரியாவின் ஜி ஹியூன் சங்கை எதிர்கொள்கிறார். சங்குக்கு எதிராக இதற்கு முன்பு மோதிய மூன்று ஆட்டங்களிலும் சாய்னா வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் காஷியாப், டென்மார்க்கின் ஹான்ஸ் கிரிஸ்டியன் விட்டிங்ஹசை சந்தித்தார். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷியாப் 21-15, 21-14 என்ற நேர் செட்களில் 39 நிமிடங்களில் வெற்றி கண்டு அரையிறுதியை எட்டினார். அரையிறுதியில் அவர் இந்தோனேஷியாவின் சிமோன் சான்டோசோவுடன் மோதுகிறார்.