Published:Updated:

தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் சாய்னா நேவால்!

தாய்லாந்து  ஓபன்:  அரையிறுதியில் சாய்னா நேவால்!
தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் சாய்னா நேவால்!
தாய்லாந்து  ஓபன்:  அரையிறுதியில் சாய்னா நேவால்!

பாங்காக்: தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில்  விளையாட இந்தியாவின் சாய்னா நேவால் தகுதிபெற்றுள்ளார்.
 
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன்  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான  சாய்னா, 8-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ஷாப்சிரி டேரட்டானசாயை  எதிர்கொண்டார்.

இப்போட்டியில் அபாரமாக ஆடிய சாய்னா 21-10, 22-20 என்ற செட் கணக்கில்  ஷாப்சிரியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.