Published:Updated:

தாய்லாந்து ஓபன்: காலிறுதியில் சாய்னா நேவால்!

பாங்காங், ஜூன்.10,2011

தாய்லாந்து ஓபன்: காலிறுதியில் சாய்னா நேவால்!

தாய்லாந்து ஓபன் கிராண்ட்ஃபிரீ சர்வதேச பேட்மின்டனில் காலிறுதிச் சுற்றுக்கு  இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் தகுதி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், இவர் தனது 2-வது சுற்றில் ஜப்பானின் மிதானி மினாட்சுடன் மோதினார்.

46 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், சாய்னா 21-13, 15-21, 21-7 என்ற செட் கணக்கில் மிதானியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதனிடையே, ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் இந்திய முன்னணி வீரர் காஷியாப் 21-16, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் மலேசியாவின் முகமது ஆரிப் அப்துல் லத்திப்பை போராடி வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.