Published:Updated:

`சீன ஓப்பன் பேட்மின்டன்' - காலிறுதிச் சுற்றில் பி.வி.சிந்து

`சீன ஓப்பன் பேட்மின்டன்' - காலிறுதிச் சுற்றில் பி.வி.சிந்து
`சீன ஓப்பன் பேட்மின்டன்' - காலிறுதிச் சுற்றில் பி.வி.சிந்து

சீன ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

சீன ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தாய்லாந்தைச் சேர்ந்த சுபான்யூவை எதிர்கொண்டார், இந்தப் போட்டியில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டை சுபான்யூ 15-21 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மூன்றாவது செட்டைக் கைப்பற்ற இருவரும் கடுமையாகப் போராடினர். இறுதியில் 24-22 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொண்டார். இந்தப்போட்டியில் பி.வி.சிந்து தனது முதல் செட்டை 21 -23 என்ற கணக்கில் இழந்தார். இதன்பின் சுதாரித்துக்கொண்டவர் அடுத்தடுத்த செட்டுகளை 21-13, 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் இருவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை வீழ்த்தி  காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.