Published:Updated:

"அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது!"- மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கங்குலி

மல்யுத்த வீராங்கனைகள், சவுரவ் கங்குலி

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.

Published:Updated:

"அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது!"- மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கங்குலி

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.

மல்யுத்த வீராங்கனைகள், சவுரவ் கங்குலி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மல்யுத்த வீராங்கனைகள்
மல்யுத்த வீராங்கனைகள்

ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இதுதொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காத நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், "இந்தியாவில் நாம் அனைவரும் கிரிக்கெட்டை வணங்குகிறோம், கொண்டாடுகிறோம். ஆனால் இதுவரை ஒரு கிரிக்கெட் வீரர் கூட எங்களுக்காகப் பேசவில்லை. எங்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை என்றாலும் நடுநிலை கருத்துகளையாவது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கலாம்" என்று தன்னுடைய ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னாள் கேப்டனும், பி.சி.சிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, "உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. செய்தித்தாள்களை பார்த்துத்தான் இந்தப் போராட்டங்கள் குறித்துத் தெரிந்துகொண்டேன்.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

என்னைப் பொறுத்தவரைத் தெரியாத ஒன்றைப் பற்றிப் பேசக்கூடாது என்பதை இந்த விளையாட்டு உலகில் கற்றுக்கொண்டேன். அவர்கள் தங்களுடைய போரைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மல்யுத்த வீரர்கள் ஏராளமான பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமையைச் சேர்த்துள்ளனர். அவர்களின் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.