இ.நிவேதா
2022 உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி, கொலம்பியாவின் தலைநகரான போகோட்டாவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
49 கிலோ எடைப் பிரிவில், சுமார் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் மீராபாய் சானு.
சீனரான ஜியாங் ஹுய்ஹுவா 206 கிலோ எடையைத் தூக்கித் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மீராபாய் சானு, சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட (198 கிலோ), இரண்டு கிலோ எடையை அதிகமாகத் தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
தன்னுடைய பயிற்சியாளர் விஜய் மற்றும் இந்தியப் பளு தூக்குதல் கூட்டமைப்பின் தலைவர் சஹதேவ் யாதவ், மற்றும் தன் நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மீராபாய் சானு.
`ஒலிம்பிக் தங்கத்தை நோக்கிய ஒரு சிறிய அடி' என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றி குறித்துப் பதிவிட்டுள்ளார் மீராபாய் சானு.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு இரண்டாவது முறையாகப் பதக்கம் வெல்கிறார்.
2017-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் மீராபாய் சானு 194 கிலோ எடை வரை தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துகள் மீராபாய் சானு!