பிரபாகரன் சண்முகநாதன்
வினி ராமன் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ப்பெண். விக்டோரியாவில் இருக்கும் Mentone Girls பள்ளியில் படித்தவர். மருத்துவ அறிவியலில் பட்டதாரி.
பார்மஸிஸ்ட் ஆக பணிபுரியும் வினி, மேக்ஸை முதலில் சந்தித்தது மெல்போர்ன் ஸ்டார் ஈவண்ட்டில். இது நடந்தது டிசம்பர் 2013.
மேக்ஸ் தான் முதலில் தன்னுடைய காதலை வினியிடம் சொன்னாராம். இருவருக்கும் ஊர் சுற்றுவது என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.
இவர்களுக்கு இடையிலான வயது வித்தியாசம் 4 வருடங்கள் 5 மாதங்கள். மேக்ஸ் தான் வினியைவிட வயதில் பெரியவர். உயரத்திலும் கூட.
2017 முதல் டேட்டிங்கில் இருக்கும் இருவருக்கும் 2020 மார்ச்சில் நிச்சயம் நடந்தது. கோவிட் கட்டுப்பாடுகளால் தள்ளி கொண்டே சென்ற திருமணம் மார்ச் 27 இல் நடைபெற உள்ளது.
மேக்ஸ், தன்னுடைய திருமணம் நடைபெற இருப்பதால் மார்ச்/ஏப்ரல் 2022 இல் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் ODI மேட்ச்களில் கலந்துகொள்ள ஒப்புதல் தெரிவிக்கவில்லை.
இந்திய வம்சாவழி பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் இரண்டாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் மேக்ஸ்வெல். முதலில் சான் டிட், மஸும் சின்காவை மணந்தார்.
க்ளென் கோபக்காரர் அதே நேரத்தில், தான் மிகவும் சென்சிடிவ் என்கிறார் வினி ராமன்.
பெண் வீட்டார் சார்பில் தமிழில் அச்சடிக்கப்பட்டு உள்ள இவர்களின் திருமண பத்திரிகை இப்போது வைரல்.
நிலவும் ஒளியும் போல என வாழ்த்து மழை இவர்களுக்கு உலகம் எங்கிருந்தும் கொட்டிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள் மக்களே!