Published:Updated:

அம்பதி ராயுடுவுக்கு பி.சி.சிஐ துரோகம் இழைத்ததா.... ஐஸ்லாந்து கொதிப்பது ஏன்?

ஒரு கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவுகளில் மற்றொரு நாட்டு வாரியம் தலையிடுவது ஆச்சர்யமாக உள்ளது

அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அம்பதி ராயுடு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை தொடரிலிருந்து ஷிகர் தவான், விஜய் ஷங்கர் ஆகியோர் காயம் காரணமாக விலகினர்.

அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு

இதனால் ரிஷப் பன்ட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கடைசிவரை காத்திருந்த அம்பதி ராயுடு இந்த அணித்தேர்வால் விரக்தியடைந்தார். இதனால் உடனடியாக அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ராயுடு அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு மயங்க் தேர்வு செய்யப்பட்டதும் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் ட்வீட் ஒன்றை வெளியிட்டது. அதில், ``உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கடைசியாக இணைந்துள்ள மயங்க் அகர்வால், சர்வதேச போட்டியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இப்போதாவது அம்பதி ராயுடு தனது 3டி கண்ணாடிகளை அணியலாம்'' என்றதோடு ''அம்பதி ராயுடு நிரந்தரமாக ஐஸ்லாந்தில் குடியேற நாங்கள் விரும்புகிறோம். ராயுடுத்தனங்கள் எங்களுக்குப் பிடிக்கும்'' என்று அதற்கான ஆவணங்களையும் ட்வீட்டில் வெளியிட்டிருந்தது.

ராயுடுவுக்கு ஆதரவாக ஐஸ்லாந்து ட்விட்
ராயுடுவுக்கு ஆதரவாக ஐஸ்லாந்து ட்விட்

ஐஸ்லாந்து கிரிக்கெட் சொல்வதும் உண்மைதான். மயங்க் அகர்வால் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. வாய்ப்பு கிடைத்தால் நேரடியாக உலகக் கோப்பை தொடரில்தான் விளையாடுவார். அதே வேளையில், ராயுடு 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1,694 ரன்களை அடித்துள்ளார். இதில், மூன்று சதங்களும் 10 அரை சதங்களும் அடங்கும்.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்த வீரரை விளையாட அனுமதிக்க வேண்டுமென்பது இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவு. ஒரு கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவுகளில் மற்றொரு நாட்டு வாரியம் தலையிடுவதில்லை.

பிசிசிஐ
பிசிசிஐ

வீரர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துகள் தெரிவிப்பார்கள். ஆனால், இப்படி ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியத்தை மற்றொரு நாடு மறைமுகமாக விமர்சிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.