Published:Updated:

`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா? - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்

`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா? - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்
News

ஹரியானா அரசாங்கம் விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா? - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்

ஹரியானா அரசாங்கத்தின் புதிய கொள்கை காரணமாக விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையானது குறைக்கப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வாரம் விளையாட்டு வீரர்களுக்குப் பரிசளிக்கும் விழாவினை நடத்த ஹரியானா அரசாங்கம் முடிவு செய்திருந்தது. காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் இந்த விழாவானது ரத்து செய்யப்பட்டது. வீரர்களுக்கான பரிசுத்தொகையானது அவரவர் வங்கிக் கணக்குகளில் ஜூன் 25-ம் தேதிக்குள் வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குத்துச்சண்டை வீரர் பஜ்ரங் பூனியா, ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் ஆகியோர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். பஜ்ரங் பூனியாவின் வங்கிக்கணக்கில் பரிசுத்தொகையாக 3 கோடி கிரடிட் ஆகியிருக்க வேண்டும். ஆனால் 2.25 கோடி மட்டுமே அவரது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பூனியா சக வீரர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அரசின் புதிய கொள்கை காரணமாக பரிசுத்தொகையானது குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்மாநில அரசின் புதிய கொள்கை ``ஒரு நிதியாண்டில் விளையாட்டு வீரர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றால் மிக உயர்ந்த பதக்கத்திற்கான முழு விருது பணத்தையும் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த பதக்கங்களுக்கான விருது பணத்தில் 50 சதவிகிதத்தைப் பெறுவார்கள் எனக் கூறுகிறது.

`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா? - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்

இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்குப் பேசிய பஜ்ரங் பூனியா, ``மாநில அரசானது முதலில் விருது வழங்கும் விழாவை ரத்து செய்தது. தற்போது பரிசுத்தொகையைக் குறைத்துள்ளது. மற்ற வீரர்களிடம் பேசும் போது புதிய கொள்கையின் படி பரிசுத்தொகையானது குறைக்கப்பட்டதாக தெரியவந்தது. ஒரு விளையாட்டு வீரனாகக் கூறுகிறேன். மாற்றான் தாய் மனப்பான்மையில் அரசு செயல்படுகிறது. ஹரியானாதான் நாட்டுக்காக அதிக பதக்கங்களை குவித்துள்ளது என்றார்.

வினேஷ் போகத் பேசுகையில், ``ஒரு விளையாட்டு வீரராக நாங்கள் ஒலிம்பிக், உலக சாம்பியன் ஷிப், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் அனைத்தையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். ஆனால், ஹரியானா அரசாங்கமானது இந்தப் போட்டிகளில் பாகுபாடு பார்க்கிறது. மற்றொரு போட்டியில் வெற்றிபெற்றால் பரிசுத்தொகை குறைப்பது எந்த வகையில் நியாயம். இரண்டு போட்டிகளில் பதக்கம் வாங்குவது என்ன குற்றமா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா? - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்

இதுதொடர்பாக ட்விட்டரில் நேற்று பதிவிட்ட பஜ்ரங் பூனியா, ``ஹரியானா இளைஞர்கள் இந்தியாவுக்காக நிறைய பதக்கங்களை வென்றுள்ளனர். ஹரியானா ஒரு சிறிய மாநிலம். ஆனால், மொத்த இந்தியாவையும் இந்த மாநில இளைஞர்கள் பெருமை கொள்ள செய்துள்ளனர். அவர்கள் பெறும் தொகையைக் குறைப்பதன் மூலம் அவர்களின் மன உறுதியை உடைக்க வேண்டாம். ஹரியானா அரசு தங்களது முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து இன்று விளக்கமளித்துள்ள ஹரியானா விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் ( Anil Vij),விளையாட்டுக் கொள்கையின் படி பரிசானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறையை அணுகலாம். நாங்கள் விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்தவில்லை எனக் கூறினார். 

இதையடுத்து பஜ்ரங் பூனியா இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில்,  ‘ஹரியானா அரசு தயவு செய்து உங்கள் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய அரசியலுக்காக வீரர்களை அவமானப்படுத்தாதீர்கள்'  எனப் பதிவிட்டுள்ளார்.