Published:Updated:

``இந்த உலகக்கோப்பை உனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!” - பாண்ட்யாவுக்கு யுவராஜ் சொன்ன மெசேஜ்

``இந்த உலகக்கோப்பை உனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!” - பாண்ட்யாவுக்கு யுவராஜ் சொன்ன மெசேஜ்
``இந்த உலகக்கோப்பை உனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!” - பாண்ட்யாவுக்கு யுவராஜ் சொன்ன மெசேஜ்

இங்கிலாந்து மண்ணில் தொடங்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஸ்பெஷலானதாக இருக்கும் என யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார். 

``இந்த உலகக்கோப்பை உனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!” - பாண்ட்யாவுக்கு யுவராஜ் சொன்ன மெசேஜ்

ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் ஒரு வாரம்தான். நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியன் யார் என தெரிந்துவிடும். இதன் கூடவே அடுத்த `உலகச் சாம்பியன்’ யார் என்ற கேள்வியும் தற்போது விவாதமாகியுள்ளது. ஆம், பலரது கவனமும் மே 30-ம் தேதி தொடங்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் மீது விழத் தொடங்கி இருக்கிறது. 

``இந்த உலகக்கோப்பை உனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!” - பாண்ட்யாவுக்கு யுவராஜ் சொன்ன மெசேஜ்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ரன் குவித்து வருவது இந்திய அணியின் பின்வரிசை பேட்டிங்குக்குப் பலம் சேர்க்கும். குறிப்பாகக் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் குவித்த 91 ரன்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அவர் அடிக்கும் சிக்ஸர்கள் குறித்து டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் சிங் பேசியிருக்கிறார். 

``இந்த உலகக்கோப்பை உனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!” - பாண்ட்யாவுக்கு யுவராஜ் சொன்ன மெசேஜ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் யுவராஜ் சிங், ``ஹர்திக் தற்போது இருக்கும் ஃபார்ம் அற்புதமானது. அவர் அதை உலகக்கோப்பை தொடருக்கும் எடுத்துச் செல்வார் என நம்புகிறேன். அவரிடம் நானே இதுகுறித்துப் பேசியிருக்கிறேன். `உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நீ சிறப்பாகச் செயல்படுவாய். வரும் உலகக்கோப்பை தொடர் உனக்கு ஸ்பெஷலாக அமையும்’ என்றேன். அவரது பந்துவீச்சும் சிறப்பாகவே இருக்கிறது. எனினும் போட்டி தரும் அழுத்தத்தில் செயல்படுவது என்ற ஒன்று உள்ளது. அதை சிறப்பாக கையாள வேண்டியதும் அவசியம். 

அவரது ஆட்டத்தைப் பயிற்சிப் போட்டியில் இருந்து கவனித்து வருகிறேன். அவர் பந்தை அடித்து ஆடுகிறார். அதைச் சிறப்பாகவும் செய்கிறார். அவர் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்துகளில் 91 ரன்கள் குவித்தது, ஐபிஎல்லில் சிறந்த இன்னிங்ஸ் என்பேன். காரணம் அவர் தரமான 4 பந்துவீச்சாளர்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டார். அதுதான் முக்கியம்” என்றார். 

``இந்த உலகக்கோப்பை உனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!” - பாண்ட்யாவுக்கு யுவராஜ் சொன்ன மெசேஜ்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 4-வது இடம் குறித்து யுவராஜிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``இந்தக் கேள்வியை நீங்கள் தேர்வுக்குழுத் தலைவரிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் அல்ல. என்னைப் பொறுத்தவரையில், 4-வது இடம் என்பது முக்கியமானது. முழுத் தொடரையும் மனதில் வைத்து அந்த இடத்துக்கான வீரர் தேர்வுசெய்யப்பட்டிருப்பார் என நம்புகிறேன். பொறுத்திருந்துப் பார்க்கலாம். 

போட்டி நடக்கும் இடங்கள் இங்கு இருப்பதுபோன்று இருக்காது. முற்றிலும் வேறாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில், இதுபோன்ற தொடர்களில் வீரர்கள் கடுமையான ப்ரஷரில் விளையாட வேண்டியிருக்கும். காரணம் மோதுவது அனைத்தும் உலகின் டாப் அணிகள். எந்த வீரர் இந்த பிரஷர்களை சரியாகக் கையாளப் போகிறார்களோ, அவர்கள்தான் சிறப்பாக விளையாடுவார்கள். அது அணியின் முடிவில் பிரதிபலிக்கும்” என்றார்.

வரும் உலகக்கோப்பை தொடரில் பாண்ட்யா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.......!

Vikatan
பின் செல்ல