Published:Updated:

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

நீச்சல், கராத்தே போலவே வீடியோ கேம்ஸ் ஆடவும்கூட, பயிற்சி வகுப்புகளுக்கு நம் பிள்ளைகளை அனுப்புகிற காலம் வந்துகொண்டிருக்கிறது மக்களே! எதிர்காலம் விநோதமானது. 

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

சென்னையில் ஒரு நிறுவனம், வீடியோ கேம்ஸ்க்கான பயிற்சியைத் தொடங்கிவிட்டது. குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சிக்காக ஆடிக்கொண்டிருந்த வீடியோ கேம்ஸ் விளையாட்டுப் போட்டியாக மாற்றப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டில் ஏசியன் விளையாட்டுப் போட்டியில் வீடியோ கேம்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை இந்தியா பெற்ற செய்திதான், பலரையும் இ-ஸ்போர்ட்ஸ் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறது.  

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற பிரபல போட்டிகளில் சேர்க்க உலகின் பல நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள கேம் பிரியர்கள், கேமிற்காகவே படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து மணிநேரம் போட்டிகளுக்கான பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளிலும் இந்தக் கலாசாரம் வளர்ந்துவருகிறது. ஐ.பி.எல், ஐ.எஸ்.எல் மாதிரியாக வீடியோ கேம்ஸுக்கான டீம்களையும் உருவாக்கி, போட்டிகளையும் நடத்திவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பிரபல கைப்பேசி நிறுவனம் நடத்திய பப்ஜி விளையாட்டுப்போட்டியில் சுமார் ஆயிரம் கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இலட்சக்கணக்கில் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.   

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

“அனைத்துவிதமான மொபைல் / கம்ப்யூட்டர் கேம்ஸும் இ-ஸ்போர்ட்ஸ் வகைக்குள் அடங்காது. மற்ற ஸ்போர்ட்ஸ் மாதிரிதான் இ-ஸ்போர்ட்ஸ்.  Real-time Strategy, Fighting, Shooting இதுமாதிரியான கேரக்டர் இருக்கும் கேம்ஸ் மட்டும்தான் இ-ஸ்போர்ட்ஸாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்கைடௌ ஸ்டுடியோஸ் சி.இ.ஓ சிவா.  

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

“ஆரம்பநிலைப் போட்டிகள் ஆன்லைனில் நடத்தப்படும். இறுதிப்போட்டி பலரின் முன்னர் நடத்தப்படும். ஆன்லைன் டெலிகாஸ்ட்டும் செய்யப்படும். கிரிக்கெட், புட்பால் மாதிரி ஒவ்வொரு கேம்ஸ்க்கும் தனித்தனி பிளேயர்ஸ், டீம்ஸ் இருக்காங்க. இந்தியாவில் டெல்லி, மும்பை, புனே, சென்னை உள்ளிட்ட இடங்களில் டோடா, சி.எஸ்.கோ, பப்ஜி கேம்ஸ் போட்டிகள் நடந்துள்ளன. மற்ற ஸ்போர்ட்ஸில் புரொபஷனலாக வீரர்கள் விளையாடுற மாதிரி இதிலும் இப்போ புரொபஷனல் பிளேயர்ஸ் வர ஆரம்பித்துள்ளார்கள் ஆனால், வீடியோ கேம்ஸ் விளையாடுகிறவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு புள்ளி, பெரிய அளவிலான ஸ்பான்ஸர்ஷிப், விளையாடுகிறவர்களின் திறமையைப் புரிந்துகொண்டு உதவி செய்கிற அரசு ஆகியவை இருந்தால் இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் அதிக கவனம் பெறும். 2024 அல்லது 2028 ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் இ-ஸ்போர்ட்ஸ் தனக்கான இடத்தைப் பிடிக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

இந்திய இ-ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் இயக்குநர் லோகேஷ் சுஜியிடம் இதன் எதிர்காலம் பற்றி பேசினேன்.

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

 “இந்தியாவில் பெற்றோர்கள் வீடியோ கேம்ஸ் பொழுதுபோக்க விளையாடும் விளையாட்டாகவும், அதற்குமேல் விளையாடினால் நேரம் வீணாகும் என்றும் நினைக்கிறார்கள். கிரிக்கெட், பேட்மின்டன் போன்ற போட்டிகளையும் ஒருகாலத்தில் அப்படித்தான் நினைத்தார்கள். சச்சின், சாய்னா நேவால் போன்றவர்கள் டிரெண்டை உருவாக்கிய பிறகு, குழந்தைகளைப் பயிற்சிக்கு அனுப்ப ஆரம்பித்தனர். இதே நிலைமை வீடியோ கேம்ஸுக்கும் வரும். கரியரை உருவாக்கக்கூடிய ஒன்றாகவும் இ-ஸ்போர்ட்ஸ் விரைவில் மாறும். சீனா அளவிற்கு இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் இன்னும் கவனம் பெறவில்லை. எதிர்காலத்தில் சீனாவைவிட இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி அடையும். இந்தியாவில் இளைஞர்களும், ஸ்மார்ட் போன்ஸும், இன்டர்நெட் பயன்பாடும் அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக வளர்ச்சியடையும். 

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

இ-ஸ்போர்ட்ஸில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை ஏசியன் கேம்ஸில் வாங்கிய மெடல்தான். வீடியோ கேமர்ஸ் மத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியை இந்த மெடல் கொடுத்திருக்கிறது. நாங்கள், இ-ஸ்போர்ட்ஸில் இடம்பெற்றுள்ள கேம்ஸுக்குப் பயிற்சி அளிக்க சர்வதேச இ-ஸ்போர்ட்ஸ் அமைப்புகளுடன் பேச்சு வார்த்தையும் நடத்திவருகிறோம். பயிற்சியாளர்கள், அணிகள் இப்படியான ஏற்பாடுகள் எவையும் இதற்கு முழுமையாக இல்லை. இ-ஸ்போர்ட்ஸில் அத்லெட்ஸ் வெற்றி பெறுவது, ஸ்பான்சர்ஷிப், விளம்பரங்கள் மூலமாகத்தான் சம்பாதிக்கிறார்கள். பெரிய அளவில் வெற்றி பெற்றால் மட்டும்தான் சம்பாதிக்க முடியும். தாங்கள் விளையாடுவதை லைவ் ஸ்ட்ரீம் செய்வதன் மூலமாகச் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த வருடம் அதிகமாகப் போட்டிகள் நடந்துள்ளன. பரிசுகளும் அதிக தொகையில் வழங்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. பெற்றோர்களின் அனுமதி, அரசின் அங்கீகாரம், திறமையை வளர்த்துக்கொள்ளுதல், ஸ்பான்சர்ஷிப் போன்றவை அதிகமாக இருக்கும்பட்சத்தில் இ-ஸ்போர்ட்ஸ் அதிகமாக வளர்ந்துவரும்” என்று கூறினார். 

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

களத்தில் உடல் வியர்க்க ஆடும் விளையாட்டும், வீடியோ கேம்ஸும் ஒன்றல்ல என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், வீடியோ கேமும் அங்கீகரித்த போட்டிகளில் ஓர் ஆட்டமாக இடம்பெறத் தொடங்கிவிட்டது என்பதே யதார்த்தம்.

ராம் சங்கர்.ச

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

2018ல் நடந்த ஏசியன் கேம்ஸ், இ-ஸ்போர்ட்ஸ் போட்டியில் வெண்கலம் வென்ற குஜராத்தைச் சேர்ந்த டிர்த் மேஹ்தாவுடன் பேசினேன்.

வீடியோ கேம்ஸை கரியராக மாற்றும் எண்ணம் எந்த புள்ளியில் வந்தது?

“நான் விளையாடத் தொடங்கிய நாள் முதல் வீடியோ கேம்ஸை கரியராக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். செஸ் போட்டிகளில் அதிகமாகக் கலந்துகொண்டேன். அதன்பிறகு  DOTA கேம்ஸ் விளையாட வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.  HEARTH STONE  கேம்ஸ் போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கிய பிறகு இதுவும் என்னுடைய கரியராக இருக்கலாம் என்று உணர்ந்தேன்.”

HEARTH STONE முக்கியமாக நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம்?


“ DOTA - வில் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. தனியாக விளையாடும் விளையாட்டில்தான் என்னுடைய மூளையை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்று நம்பினேன். அப்போது  HEARTH STONE தெரியவந்தது. தொழில்நுட்பம், நுணுக்கங்கள் ஒவ்வொன்றும் என்னைக் கவர்ந்தன.”

ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் விளையாடுவீர்கள்? பயிற்சிக்கென உங்களுக்குத் தனித்துவமான ஸ்டைல் எதுவும் உள்ளதா?


“தினமும் அல்லது வாரம்தோறும் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய நண்பர்களுடன் விளையாடும்போது சின்னச்சின்ன நுணுக்கங்களைக் கற்றுக்கொள்கிறேன். அதுதான் கேம்ஸில் நான் எளிமையாக வெற்றிபெற வைக்கிறது. ஒரு சீரிஸ் 40 நிமிடங்கள் போகும். ஒரு போட்டியில் 6 அல்லது 7 சுற்றுகள் இருக்கும். தினமும் 2 மணிநேரம் கண்டிப்பாக பயிற்சி செய்வேன். போட்டி நேரங்களில் 12 மணிநேரம் வரை பயிற்சி செய்வேன்.”

பெற்றோர்கள் எந்த அளவிற்குத் துணை நிற்கிறார்கள்?


“என்னுடைய முடிவுக்கு அவங்க முழு சப்போர்ட் பண்றாங்க. ஆரம்பத்தில், உடல் நலனைக் காரணம் சொல்லி ரொம்ப நேரம் கணினியில் இருக்க விடமாட்டாங்க. ஆனால், இப்போது இரவெல்லாம் கூட விளையாட அனுமதிக்கிறார்கள். பெரும்பாலும், வெளிநாட்டு நண்பர்களுடன் விளையாடுவதால் இரவு நேரம்தான் சரியாக இருக்கும்.”

இ-ஸ்போர்ட்ஸ் பற்றிய உங்களுடைய பொதுவான எண்ணம்?

“எதிர்காலத்தில் இ-ஸ்போர்ட்ஸ் மெயின் ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸின் ஒரு அங்கமாக மாறும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.”

வீடியோ கேம்ஸ் உங்களை மனரீதியாக அல்லது உடல்ரீதியாகப் பாதித்துள்ளதா?


“மனரீதியான கட்டுப்பாட்டை நான் கற்றுக்கொண்டேன். வீடியோ கேம்ஸ் விளையாடுகிறவர்களுக்கு மனரீதியான கட்டுப்பாடு மிகவும் அவசியம். வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் எந்த பாதிப்பும் வராது என்கிற நிலைமைக்கு நான் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். உடற்பயிற்சி, போதிய ஓய்வு போன்றவை பிளேயர்ஸ்க்கு ரொம்ப முக்கியம்” 

வீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்!

வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளின் மனநலம் பற்றி மனநல ஆலோசகர் கிறிஸ்டினா:  “தன்னுடைய வேலைகளைச் செய்வதற்காக, சோம்பேறித்தனத்திற்காக கைப்பேசி / கணினிகளைக் குழந்தைகளிடம் கொடுப்பதிலிருந்து இந்தப் பிரச்னை ஆரம்பமாகிறது. குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதால் மட்டும்தான் கேம்ஸிலிருந்து குழந்தைகளை வெளிக்கொண்டுவர முடியும். கலை, வாசிப்பு என ஆரோக்கியமான விஷயங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் தானாகவே எல்லாம் மாறும். இ-ஸ்போர்ட்ஸ் நம்முடைய வாழ்க்கையின் பகுதி நேரத் தொழிலாக இருக்கும் பட்சத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் புரொபஷனல் போட்டிகளில் அப்படி இருந்தால் போட்டிகளில் ஜெயிக்க முடியாது. நிறைய நேரம் தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டிய நிலைமை வரும். இச்சூழலில் தானாகவே பாதிப்புகள் ஏற்படும். மற்ற நாடுகளைவிட இந்திய மக்களின் மனநிலை மிகவும் பலவீனமானது. எளிமையாக நாம் அடிக்‌ஷன் நிலைமைக்குச் சென்றுவிடுவோம். மிகவும் எச்சரிக்கையுடனே இதில் ஈடுபடவேண்டும்.’’