சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

குட்பை 2018 - விளையாட்டு

குட்பை 2018 - விளையாட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
குட்பை 2018 - விளையாட்டு

குட்பை 2018 - விளையாட்டு

குட்பை 2018 - விளையாட்டு

ஷ்யாவில் ஜூன்- ஜூலை மாதங்களில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை வென்றதன் மூலம், இரண்டாவது முறையாக சாம்பியன் மகுடம் சூடியது, பிரான்ஸ் அணி.

குட்பை 2018 - விளையாட்டு

பேட்மின்டன் உலக டூர் ஃபைனலை வென்று, தன் நீண்ட நாள் தங்க தாகத்தை நிறைவேற்றினார் பி.வி.சிந்து. இந்தப் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் இவர்.

டிசா தலைநகர் புவனேஷ்வரில் நவம்பர் 28 - டிசம்பர் 16 நடந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி, பெல்ஜியம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தா, ‘உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வென்றார்.

குட்பை 2018 - விளையாட்டு

மெரிக்க ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்று, ‘கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர்’ என்ற சாதனை படைத்தார் 21 வயது, நவோமி ஒசாகா.

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று சரித்திரம் படைத்தார், மேரி கோம்.

குட்பை 2018 - விளையாட்டு

ந்திய கபடி அணியின் மூத்த வீரர், அனூப் குமார் அனைத்து போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஸ்திரேலிய ஓப்பன் பட்டம் வென்றதன் மூலம், ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற வரலாறு படைத்தார், ரோஜர் ஃபெடரர்.

ருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 205 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்களைக் கடந்தார், விராட் கோலி. ‘அதிவிரைவாக 10,000 ரன்களைக் கடந்தவர்’ என்ற சாதனை படைத்தார்.

குட்பை 2018 - விளையாட்டு

ந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விராட் கோலி, மீராபாய் சானு இருவருக்கும் வழங்கப்பட்டது.

‘ஃபார்முலா ஒன்’ கார் பந்தயத்தில், ஐந்தாவது முறையாக வென்று அசத்தினார் இங்கிலாந்து வீரர், லூயிஸ் ஹேமில்டன். 

குட்பை 2018 - விளையாட்டு

12-வது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், 8.4 கோடி ரூபாய்க்கு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார் தமிழக வீரர், வருண் சக்ரவர்த்தி.

முதன்முறையாக வழங்கப்பட்ட பெண்களுக்கான ‘பாலன் டி ஓர்’ விருதை, நார்வேயின் கால்பந்து வீராங்கனையான ஆடா ஹெகன்பெர்க் பெற்றார்.

குட்பை 2018 - விளையாட்டு

FIFA பிளேயர் ஆஃப் தி இயர், UEFA பிளேயர் ஆஃப் தி இயர், பேலன் டி ஓர் என மூன்று பெரிய விருதுகளையும் வென்றார், குரோஷிய கால்பந்து அணியின் கேப்டன், லூகா மோட்ரிச். 2018 உலகக் கோப்பையின் கோல்டன் பால் விருது வென்றவரும் இவரே!

மு.பிரதீப் கிருஷ்ணா