சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

14 வயது ‘பவர்’ நாயகி!

14 வயது ‘பவர்’ நாயகி!
பிரீமியம் ஸ்டோரி
News
14 வயது ‘பவர்’ நாயகி!

கராத்தே... பாக்ஸிங்... பவர் லிஃப்டிங்

14 வயதில் நம்மில் பலரின் சாதனை என்னவாக இருக்கும்? 10-ம் வகுப்பு படிச்சுட்டிருப்போம். ஆனால், இந்தியாவின் 43 ஆண்டுக்கால கனவை நனவாக்கி இருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த ஆஷிகா.

செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், மூன்று தங்கம் வென்றுள்ளார். 40 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின், 43 கிலோ எடைகொண்ட   சப்-ஜூனியர் பிரிவில், இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

14 வயது ‘பவர்’ நாயகி!

‘‘என் அப்பா ஆறுமுகம், முனிசிபாலிட்டி டிரைவர். அம்மா சீதா, அங்கன்வாடி டீச்சர். அப்பா 35 வருஷமா கராத்தே மாஸ்டராகவும் இருக்கார். நானும் என் அண்ணனும் அவரிடம் கராத்தே கற்று, பல போட்டிகளில் ஜெயிச்சிருக்கோம். அப்புறம், பாக்ஸிங்ல ஈடுபாடு வந்து அதிலும் கலந்துக்கிட்டேன். ஸ்டேட் அளவில் கோல்டு மெடல் வாங்கியிருக்கேன். ரெண்டு வருஷமாத்தான் பவர் லிஃப்டிங் பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். பவர் லிஃப்டிங்கில் ஸ்டேட் லெவலில் ஸ்டார் வுமன் அவார்டு, கோல்டு மெடல், தேசிய அளவில் சில்வர் மெடல் வாங்கியிருக்கேன்.  சவுத் ஆப்பிரிக்காவுல நடந்த வேர்ல்டு சாம்பியன்ஷிப்ல மூணு கோல்டு மெடல் உட்பட ஐந்து மெடல்களை ஜெயிச்சது சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் ஆஷிகா.

14 வயது ‘பவர்’ நாயகி!

‘‘நானும் பவர் லிஃப்டிங்கில் நேஷனல் ரெக்கார்டு பண்ணியிருக்கேன். என்  நண்பர் காமராஜ், காமன்வெல்த் போட்டியில் கோல்டு மெடல் வாங்கியவர். அவர்தான் ஆஷிகாவுக்கு பயிற்சி கொடுத்தார். 1975-ம் வருஷம், இந்திய வலு தூக்கும் சம்மேளனம் தொடங்கப்பட்டது. கடந்த 43 ஆண்டுகளில் சர்வதேச அளவில்,  வலு தூக்கும் போட்டிகளில் இந்தியா தங்கம்  வென்றதில்லை. அதை  மாற்றியிருக்கிறார் ஆஷிகா. இது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை.  சரியான ஸ்பான்சர் இல்லாமல்,  கடன் வாங்கியும் நகைகளை விற்றும்தான் போட்டிக்குச் சென்றோம்’’ என்கிறார் ஆஷிகாவின் தந்தை ஆறுமுகம்.

14 வயது ‘பவர்’ நாயகி!

சாதனை நாயகி ஆஷிகாவை, நமது விகடனும் கெளரவித்துள்ளது. ஆம்! பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களுக்காக வழங்கப்படுவது, ‘அவள் விருதுகள்’. அதில், ‘லிட்டில் சாம்பியன்’ என்ற பிரிவில் விருது பெற்றுள்ளார் ஆஷிகா.

14 வயது ‘பவர்’ நாயகி!

‘‘இது என் அடுத்தடுத்த சாதனைகளுக்கு ஊக்கமாகவும் தூண்டுகோலாகவும் இருக்கு.   ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று கோல்டு தட்டணும். ஐபிஎஸ் அதிகாரி ஆகணும் என நிறையக் கனவுகள் இருக்கு. அரசு உதவி செய்யணும். சுற்றியிருக்கும் நல்லவர்களின் ஊக்கத்தில் சாதனைகள் செய்வேன்’’ என நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் ஆஷிகா.

- இ.மோகன்,  படங்கள்: அ.குரூஸ்தனம்