பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

களிமண்னன்

களிமண்னன்
பிரீமியம் ஸ்டோரி
News
களிமண்னன்

மு.பிரதீப் கிருஷ்ணா

களிமண்னன்

பிரெஞ்சு ஓப்பன் பட்டம் வென்று சரித்திரம் படைத்துள்ளார் ரஃபேல் நடால்.  வழக்கமாகக் கோப்பையைக் கையில் வாங்கியதும் செல்லமாகக் கடிப்பவர் (கோப்பையைத்தான்!), இந்த முறை கட்டிப் பிடித்து அழுதுவிட்டார். "க்ளே சீசன் தொடங்கும்போது நான் வெற்றி பெறுவேனா என்ற சந்தேகம் என்னை அரித்துக்கொண்டே இருந்தது" என்று தெரிவித்த நடால், இந்த ஆண்டும் காயங்களில் சிக்கினார். இதனாலேயே ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் வெளியேற வேண்டியதானது. இரண்டு மாதங்கள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். முக்கியமான தொடர்களிலிருந்து விலகினார். ஏப்ரலில் மீண்டும் விளையாடத் தொடங்கியபோது அந்தப் பழைய வேகம் இல்லை. ரொம்பவே தடுமாறினார். காயம் அவரை பிரெஞ்சு ஓபன் ஃபைனல் வரை துரத்தியது. இடது கையில் காயம். தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. தன் வாழ்க்கையில் பல காயங்களை, பல அறுவை சிகிச்சைகளைப் பார்த்தவர்; இந்தக் காயம் அவரை தடுக்கவில்லை, தடுக்கவும் முடியவில்லை. வலியுடனே விளையாடினார்; வென்றுவிட்டார். ‘நான்தான்டா களிமண் தரையில் ராஜா' என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்குச் சொல்லிவிட்டார்.

வாழ்த்துகள் ராஜாவே!