Published:Updated:

18 வயது பிரித்வியின் 19 ஆசம் பௌண்டரிகள்... பிரித்வி... அசாருதினா, கங்குலியா!? #INDvWI

ஜனவரி 5, 2017... ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுகமானார் பிரித்வி. அப்போது அவரது வயது 17 வருடம், 57 நாள்கள்! இந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் சந்தித்தது வெற்றியை மட்டுமே.

18 வயது பிரித்வியின் 19 ஆசம் பௌண்டரிகள்... பிரித்வி... அசாருதினா, கங்குலியா!? #INDvWI
18 வயது பிரித்வியின் 19 ஆசம் பௌண்டரிகள்... பிரித்வி... அசாருதினா, கங்குலியா!? #INDvWI

வழக்கமாக `நான் - ஸ்ட்ரைக்கர்' எண்டில் நெருக்கடி இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்தார் புஜாரா. தேவையற்ற ரன்னுக்கு அழைத்து பிரஷர் கொடுக்கும் வேலையை ப்ரித்வி அதுவரை செய்யவே இல்லை. விக்கெட்டுகளுக்கு இடையே ஓடும்போது இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. பௌண்டரி எல்லைக்கு அருகில் சென்றால் மட்டுமே ரன் எடுப்பது எனத் தீர்மானித்திருந்தனர். ரன்கள் எளிதாக வந்துகொண்டிருந்தன. தேவேந்திர பிஷூ ஓவர்... புஜாரா அடித்த பந்து ஃபீல்டருக்கு அருகில் சென்றதுமே `கால்' செய்துவிட்டு ஓடத் தொடங்கிவிட்டார் ப்ரித்வி. பிரச்னை ஏதுமில்லாமல் ரன் எடுக்கப்பட்டது. அதுவரை அமைதியாக இருந்த பிரித்வி எதற்காக அந்த ஒரு ரன்னுக்கு அவசரப்பட்டார் என்பது புரியாமல் இருக்க, அடுத்த பந்திலேயே அதற்குப் பதில் சொன்னார்.

பிஷூ வீசிய முந்தைய ஓவரில், ஷா பெரிதாக ரன் எடுக்கவில்லை. சொல்லப்போனால் அந்த ஓவரில்தான் அவர் அடக்கிவாசித்தார். பந்து அவர் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிதாக எழும்பாததால், அவரால் தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், அந்த 6 பந்துகளில் பௌலரை நன்றாக மதிப்பிட்டுவிட்டார். அதனால்தான் பிஷூவின் அடுத்த ஓவரில் தனக்கு ஸ்ட்ரைக் வேண்டுமென்று ஓர் அவசர ரன்னிங் கால் ஸ்ட்ரைக் கிடைத்துவிட்டது. ஃபுல் லென்த்தில் பிட்ச்சான பந்தை இடதுகாலை கொஞ்சம் முன்னால் வைத்து, `half volley'ல் பந்தை லாங் ஆஃப் பௌண்டரிக்கு அனுப்பினார் ஷா. அற்புதமான ஷாட். தன் முதல் சர்வதேசப் போட்டியில் அவர் காட்டிய ஆட்டிட்யூட் பிரமிப்பு!

18 வயது பிரித்வியின் 19 ஆசம் பௌண்டரிகள்... பிரித்வி... அசாருதினா, கங்குலியா!? #INDvWI

இந்த இளம் மும்பை வீரரை ஓயாமல் புகழ்ந்துகொண்டிருந்த கவாஸ்கரின் கமென்டரியைத் தாண்டியும், ப்ரித்வியை ரசிக்க முடிந்ததற்குக் காரணம் அவர் கொஞ்சம்கூட பதற்றம் இல்லாமல் விளையாடியதுதான். சர்வதேச அரங்கில் தன் பெயரைப் பதிக்க, அவர் சிறிதும் நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. முதல் ஓவரிலிருந்தே வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து ஆடத் தொடங்கிவிட்டார். கீமோ பால், ஷெர்மான் லீவிஸ் இருவரும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியிலேயே வீசிக்கொண்டிருக்க, தொடர்ச்சியாக கட் ஷாட்கள் ஆடி அவர்களைப் பதம்பார்த்தார் ப்ரித்வி. கேப்டன் ஹோல்டர் இல்லாதது முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே உணரப்பட்டது. பல பௌலர்களை மாற்றிப்பார்த்தும் கேப்டன் பிராத்வெயிட்டுக்குச் சாதகமாக முடிவுகள் கிடைக்கவில்லை. 

பேக் ஃபூட் எடுத்து ப்ரித்வி ஆடிய கட் ஷாட்கள் பார்க்க அவ்வளவு அழகு. ஒவ்வொன்றும் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு கொஞ்சமும் நேரம் எடுத்துக்கொள்ளாமல் பௌண்டரி எல்லையை அடைந்தபோது, `இந்த இளைஞனுக்கு 18 வயதுதானா!' என்று சந்தேகம் வருகிறது. அந்த அளவுக்கு ஷாட்களில் பெர்ஃபெக்‌ஷன். அதேபோல், ஸ்பின்னர்களை `ஸ்லாக் ஸ்வீப்' செய்யும்போது பேட்டின் ஸ்விங் - கனகச்சிதம். வலைப்பயிற்சியில் ஸ்லாக் ஸ்வீப் மட்டுமே பயிற்சி எடுத்ததுபோல் அவ்வளவு நேர்த்தி. அடித்த 19 பௌண்டரிகளில் ஒன்று, இரண்டு தவிர்த்து அத்தனையுமே ஆசம் ரகம்!

ஜனவரி 5, 2017... ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் ரஞ்சிக்கோப்பைத் தொடரில் அறிமுகமானார் ப்ரித்வி. அப்போது அவரது வயது 17 வருடம், 57 நாள். இந்த ஒன்றரை ஆண்டில் அவர் சந்தித்தது வெற்றியை மட்டுமே. முதல் ரஞ்சிப் போட்டியிலேயே சதம், ஐந்தாவது U-19 போட்டியிலேயே சதம், U-19 உலகக்கோப்பை வெற்றி, ஐ.பி.எல் அறிமுகம் என றெக்கை கட்டிப் பறந்தவர், இப்போது வேறொரு வெளியில் பறந்துகொண்டிருக்கிறார். அறிமுகப் போட்டியில் அரைசதம் நெருங்கியபோது, சரித்திரச் சதத்தை நெருங்கியபோது... கொஞ்சம்கூட அந்த இளைஞனின் முகத்தில் பதற்றமே இல்லை. 99 பந்துகளில் சதம் அடித்து துள்ளிக் குதித்தபோது, மொத்த அரங்கமும் எழுந்து நின்றிருந்தது. தன் முதல் போட்டியிலேயே கிரிக்கெட் உலகின் மரியாதையைச் சம்பாதித்துவிட்டார் ப்ரித்வி!

ப்ரித்வி ஆடியவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே `Aerial' ஷாட்கள். அப்படி ஸ்லாக் ஷாட் ஆடியபோது, ஃபீல்டர் இல்லாத இடங்களில் ஆடவும் தவறவில்லை. பேக்வேர்டு பாயின்ட் திசையில் ஆட நினைத்த இரண்டு ஷாட்கள் மட்டும் எட்ஜானது. மற்றபடி மோசமான ஷாட் எனச் சொல்லும்படி ப்ரித்வி எதுவும் ஆடவில்லை. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடிய இந்த ஒரு இன்னிங்ஸை வைத்து `இவர்தான் இந்தியா தேடும் ஓப்பனர்' எனச் சொல்லிவிட முடியாது. இந்த இன்னிங்ஸை ஒரு டெஸ்ட் இன்னிங்ஸாக அணுகினால், ஆஸ்திரேலியா தொடருக்கு ஏன் சரிவர மாட்டார் என்று பல காரணங்கள் பட்டியலிடலாம். ஆனால், இந்த நல்ல தருணத்தில் அதுவும் பேசவேண்டாம். 18 வயதுதான். கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கற்றுக்கொள்ளட்டும். 

கங்குலி, அசார், தவான், ரோஹித், ரெய்னா எனப் பல இந்திய வீரர்கள் இந்திய அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்துள்ளனர். இந்த இளம் வீரரும் அந்த சீனியர்களின் வரிசையில் இணைந்துள்ளார். ஆனால், அவர்களுள் கங்குலி, அசார் போன்ற ஒருசிலரால் மட்டுமே டெஸ்ட் ஃபாட்மட்டில் தொடர்ந்து ஜொலிக்க முடிந்தது. காரணம், மற்ற வீரர்கள் டெஸ்ட் போட்டியை அணுகியவிதம். பிரித்வி அதில் கவனமாக இருக்கவேண்டும். ஆஃப் சைட் அவர் ஆடிய கட் ஷாட்களில் கங்குலியின் நளினம் அப்படியே இருந்தது. சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டபோது அசாரிடம் இருந்த அந்த தைரியம் வெளிப்பட்டது. இந்தியாவின் இரண்டு முன்னாள் கேப்டன்களை பல இடங்களில் பிரதிபலித்தார் ஷா. ஆனால், அவர்கள் இருவரின் டெஸ்ட் வாழ்க்கையும்கூட வேறு மாதிரியாகத்தான் இருந்தது. அசாரிடம் இருந்த கன்சிஸ்டன்ஸி கங்குலியிடம் இருக்கவில்லை. பிரித்வி அந்த விஷயத்தில் யாரைப் பிரதிபலிப்பார் என்பதுதான் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். 

18 வயது பிரித்வியின் 19 ஆசம் பௌண்டரிகள்... பிரித்வி... அசாருதினா, கங்குலியா!? #INDvWI

தொடக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடிய புஜாராவும், 15 ஓவர்களுக்குப் பிறகு அடித்து ஆடத் தொடங்கினார். வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களில் ஷெனான் கேப்ரியல் தவிர்த்து யாருமே ஸ்டம்ப் லைனில் பந்து வீசவில்லை. அவரும் இரண்டாவது ஸ்பெல்லிலிருந்து லைன் & லென்த் கிடைக்காமல் சிரமப்பட்டார். இதனால் ரன் சேர்ப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் எளிதாகிவிட்டது. ப்ரித்வி எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் அனைவரின் பந்துவீச்சையும் அடித்து நொறுக்கினார். கிரீஸிலிருந்து வெளியே நிற்காமல் ஸ்டம்புகளுக்கு அருகிலேயே நின்றதால், அவரால் பந்துகளை நன்கு கணித்து, ஷாட்களுக்கு டைமிங் எடுத்து ஆடமுடிந்தது. ஆஃப் கட் செய்வது இன்னும் எளிதானது. 

ஒருகட்டத்தில் தன் வழக்கமான ஆட்டத்தை (17 பந்துகளில் 1 ரன்) ஆடிக்கொண்டிருந்தார் புஜாரா. ஆனால், போகப்போக அவரும் ஒருநாள் போட்டியைப்போல் ஆடத் தொடங்கினார். அடுத்த 50 பந்துகளில் 49 ரன்கள். உணவு இடைவேளைக்கு முன்னராகவே அரைசதம் அடித்துவிட்டார். அந்த அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு மோசமாக இருந்தது. சொந்த ஊரில் சதமடிக்கவேண்டியவர், 84 ரன்களிலேயே வெளியேறினார். அடுத்து சில நிமிடத்திலேயே 134 ரன்களில் வெளியேறினார் ஷா. தன் அறிமுகப் போட்டியிலேயே மொத்த தேசத்தையும் தன்னைக் கவனிக்கவைத்து வெளியேறியது அந்த 18 வயதுப் புயல். 

18 வயது பிரித்வியின் 19 ஆசம் பௌண்டரிகள்... பிரித்வி... அசாருதினா, கங்குலியா!? #INDvWI

பிரித்வி வெளியேறியபோது இந்திய அணியின் ரன்ரேட் 4.61. ஆனால், அதன் பிறகு ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது. கேப்டன், துணைக் கேப்டன் கூட்டணி பொறுமையாக விளையாடியது. ரஹானே தொடக்கத்தில் தடுமாற, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொஞ்சம் நேர்த்தியாகப் பந்துவீசத் தொடங்கினார். அதனால் அந்த ஜோடி அவசரம் இல்லாமல் ஆட்டத்தைக் கையாண்டது. புதுமுக வீரர்கள் நிறைய இருப்பதால், தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள ரஹானே தன்னை நிரூபிக்கவேண்டிய அவசியம் இருந்தது. அதை உணர்ந்து நிதானமாக விளையாடினார். கிட்டத்தட்ட 30 ஓவர்கள் நிதானமாக ஆடியவர், ஆட்டம் முடியும் தருணத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக ஆடி வெளியேறினார். அவர் அவுட்டானதோடு சேர்த்து, இந்திய அணிக்கு இருந்த ஒரு ரிவ்யூவையும் காலி செய்துவிட்டுக் கிளம்பினார்.

முதல் ரிவ்யூவை எதற்கு என்றே தெரியாமல் எடுத்து வீணடித்தார் கே.எல்.ராகுல். முதல் ஓவரிலேயே கேப்ரியல் வீசிய பந்தின் ஸ்விங்கை நன்கு கணித்திடாமல் ஆடி, எல்.பி.டபிள்யூ ஆனார். விக்கெட்டை இழக்க விரும்பாதவர் உடனே ரிவ்யூ கேட்டார். தெளிவான அவுட். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் இப்படி இவர் ரிவ்யூவை வீணடிக்க, 2 விக்கெட்டுகள் பின்னர் வீணானது. இந்திய பேட்ஸ்மேன்கள் ரிவ்யூ எடுப்பதில் இனிக் கவனமாகச் செயல்படவேண்டும். இல்லையேல், முக்கியமான தருணங்களில் அது பயனற்றுப்போய்விடும்.

18 வயது பிரித்வியின் 19 ஆசம் பௌண்டரிகள்... பிரித்வி... அசாருதினா, கங்குலியா!? #INDvWI

ஓய்வுக்குப் பிறகு களம் கண்ட கேப்டன் கோலி மீண்டும் அசத்திவிட்டார். ரொம்ப கூலாக ஆடியவர், தன் 20-வது டெஸ்ட் அரைசதத்தைக் கடந்தார். அதை 24-வது சதமாகவும் மாற்றிவிட்டார்.  ரிசப் பன்ட் தன் பங்குக்கு 92 ரன்கள் அடித்துவிட்டார்.  இந்தியா எப்படியும் முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டிவிடும். பிரித்வி ஷா அடித்த அதிரடி சதம், கோலியின் சதம், இந்தப் போட்டியில் இந்தியா பெறப்போகும் மாபெரும் வெற்றி... அட இந்தியா இங்கிலாந்துலயும் நல்லாத்தாங்க ஆடுச்சு! பேசாம நாம இங்கிலாந்துகூடவெல்லாம் ஆடாம, வெஸ்ட் இண்டீஸ்கூட ஆண்டுமுழுக்க ஆடலாம். இல்லாட்டி, பூரா பேரையும் இந்தியா வரவச்சுடலாம்