சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

விளையாட்டு

விளையாட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
விளையாட்டு

மு.பிரதீப் கிருஷ்ணா

விளையாட்டு

கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே, மூன்று மகன்கள் உடையவரான ரொனால்டோ, தன் நான்காம் குழந்தைக்கு அலானா மார்டினா எனப் பெயர் வைத்துள்ளார். மூத்த மகன் ரொனால்டோ ஜூனியருக்கு 7 வயது. அவரும் கால்பந்தில் தந்தையைப்போலவே கலக்குகிறார். அவர் ஷாட் அடிப்பதிலிருந்து, அதைக்கொண்டாடுவது வரை அப்படியே ரொனால்டோவின் ஜெராக்ஸாக விளங்குகிறார்.

விளையாட்டு

முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் ஜானா நவோட்னா, நவம்பர் 19-ம் தேதி காலமானார். செக் குடியரசு நாட்டில் பிறந்த நவோட்னா, 19 வயதிலேயே டென்னிஸ் அரங்கில் நுழைந்தவர்.  அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே புகழ்பெற்ற விம்பிள்டன் பட்டத்தை வென்று அசத்தினார். இரட்டையர் பிரிவில் 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள அவர், 67 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தார். ஒலிம்பிக் போட்டியில் தன் நாட்டுக்காக 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வயது 49.

விளையாட்டு

டெஸ்ட் போட்டியின் ஐந்து நாள்களும் பேட்டிங் செய்து அசத்தியுள்ளார் இந்திய வீரர் சதேஷ்வர் புஜாரா. கொல்கத்தாவில், இலங்கையுடன் நடந்த டெஸ்ட் போட்டியின் முதலிரு நாள்கள் மழையால் பாதிக்கப்பட, மூன்றாம் நாள் வரை முதல் இன்னிங்ஸ் ஆடினார் புஜாரா. இலங்கையின் முதல் இன்னிங்ஸ் போட்டி நான்காம் நாளே முடிய, அன்று மாலை களமிறங்கியவர் ஐந்தாவது நாள் காலை ஆட்டமிழந்தார். ஆக, இந்தப் போட்டியின் ஐந்து நாள்களும் ஆடிவிட்டார். இந்தச் சாதனையைப் படைக்கும் மூன்றாவது இந்தியர் இவர். உலக அளவில் 9-வது நபர்.

விளையாட்டு

ந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர். 26 வயதான இவர் ஓர் ஆல்ரவுண்டர். திருநெல்வேலியில் பிறந்தவர். 5 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்த விஜய் சங்கர், தமிழக ஒருநாள் அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார். ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்திய அணிக்காகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் 27-வது தமிழக வீரர் விஜய் சங்கர்.

விளையாட்டு

ந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நான்காவது சீசன், நவம்பர்  17-ம் தேதி கொச்சினில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்தமுறை பெங்களூரு மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் முதன்முறையாக இத்தொடரில் கலந்துகொள்கின்றன. 10 அணிகள் மோதும் இந்தத் தொடர், 5 மாதங்கள் நடக்கும் மிகப்பெரிய சீசனாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் சென்னையின் எஃப்.சி அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் க்ரிகரி நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக, போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த ஹென்ரிக் செரேனோ செயல்படுவார்.

விளையாட்டு

தெரியுமா?

* ஒலிம்பிக் குழுவின் தலைமையிடம், சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் உள்ளது.