பொது அறிவு
Published:Updated:

மெகா பபுள்!

மெகா பபுள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மெகா பபுள்!

எம்.மணி - படங்கள்: மீ.நிவேதன்

சுட்டிகளின் சுவாரஸ்யமான பொழுதுபோக்குகளில் ஒன்று, சோப்புக் கரைசலைக்கொண்டு பபுள்ஸ் விடுவது.

வெளியே அடிக்கும் வெயிலுக்கு இதமாக வீட்டுக்குள்ளேயே செய்து மகிழலாம்...

மெகா பபுள்!

சின்ன பபுள்

தேவையான பொருள்கள்: கிளிசரின், சோப் ஆயில், சூடானநீர், ஒரு பீக்கர், ஸ்ட்ரா, புனல்.

செய்முறை:

1. பீக்கரில் கிளிசரின் சிறிதளவு ஊற்றவும்.

2. சோப்ஆயில் சிறிதளவு ஊற்றவும்.

3. சிறிதளவு சூடான நீரை ஊற்றவும்.

4. ஸ்ட்ராவைக்கொண்டு நன்கு கலக்கவும்.

5. இந்தக் கலவையில், ஸ்ட்ராவைத் தொட்டு ஊதவும். புனலின் அடிப்பாகத்தினாலும் தொட்டு, புனலின் வாய் வழியே ஊதவும். இரண்டிலும் குட்டிக் குட்டியாக நிறைய பபுள்ஸ்... சங்கிலித் தொடர் போல அழகாக வருவதைப் பார்க்கலாம்.

மெகா பபுள்!

மெகா பபுள்

தேவையான பொருள்கள்: கிளிசரின், சோப்ஆயில், சூடானநீர், ஸ்ட்ரா, வாய் அகன்ற பிளாஸ்டிக் கிண்ணம், ஒரு துளையுள்ள இரும்புக்் குண்டு, துளையுள்ள இரண்டு குச்சிகள் மற்றும் 3 மீட்டரில் ஒரு நாடா.

செய்முறை:    

1. பிளாஸ்டிக் கிண்ணத்தில் கிளிசரினை ஊற்றவும்.

2. பிறகு, சோப்ஆயிலை ஊற்றவும்.

3. அதில், சூடானநீரை ஊற்றவும்.

மெகா பபுள்!

4. ஸ்ட்ராவைக்கொண்டு நன்கு கலக்கவும். இந்தக் கலவையில் ஸ்ட்ராவைத் தொட்டு ஊதிப்பார்க்கவும்.

5. நாடாவை முதலில் ஒரு  மணி குண்டில் நுழைக்கவும்.

6. நாடாவின் ஒரு பக்க முனையை, குச்சியின் முனையில் உள்ள வளையத்தில்  நுழைக்கவும். நாடாவின் மறுபக்க முனையை, மற்றொரு குச்சியின் முனையில் உள்ள வளையத்தில்  நுழைக்கவும்.

7. நாடாவின் இரண்டு முனைகளையும் முடிச்சுப் போட்டுவிடவும்.

8. இந்த நாடா செட்டப்பை சோப்புக் கரைசலில் அமிழ்த்தி எடுக்கவும். குச்சி மற்றும் நாடாவை முக்கோண வடிவில் இரண்டு கைகளால் தூக்கிப் பிடிக்கவும். குண்டு அடிப்பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

9. காற்று வீசும் வேகத்துக்கு ஏற்ப  மெகா பபுள் உருவாவதைப் பார்க்கலாம்.

மாடல்: ஆர்.மீனாட்சி, எஸ்.ரிஷி கிருஷ்ணன், கே.ரேணுகா தர்ஷினி