பொது அறிவு
Published:Updated:

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!

மு.ராஜேஷ்

“குழந்தைகளுக்கு விடுமுறை விட்டாச்சு; வீட்டில் இருந்தால் மொபைலை வைத்து கேம்ஸ் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்” என்பவர்களுக்கு, குழந்தைகளின் கற்றலையும் யோசிக்கும் திறனையும் மேம்படுத்த உதவும் சில ஆப்ஸ் மற்றும் கேட்ஜெட்ஸ்களின் தொகுப்புகள் இங்கே... 

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!


ஏ.பி.சி கிட்ஸ்-ட்ரேஸிங் & போனிக்ஸ்!


ந்த ஆப், குழந்தைகளுக்கு ஆங்கில எழுத்துக்களை எழுதவும் உச்சரிக்கவும் கற்றுக் கொடுக்கும். இதன் மூலமாக எழுத்துக்களை எந்த முறையில் எழுத வேண்டும் என்றும், அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொள்ளலாம். இதனால், குழந்தைகளின் கையெழுத்து மேம்படும். இதைப் பயன்படுத்தும்போது இடையூறாக விளம்பரங்கள் எதுவும் தோன்றாது என்பது இந்த ஆப்பின் மற்றொரு சிறப்பு. 

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!

நம்பர்ஸ் ஃபார் கிட்ஸ்! 

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!

குழந்தைகள் கடினமாக நினைக்கும் கணிதத்தை, இந்த ஆப் எளிதான முறையில் கற்றுக்கொடுக்கும். கூட்டல், கழித்தல் முறைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன. விருப்பமான பொருள்களின்மூலம் கற்றுக்கொடுப்பதால், குழந்தைகளின் கற்றல் ஆர்வம் அதிகரிக்கும்.

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!

ஹேப்பி கிட்ஸ் டைமர்-மார்னிங்

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!

குழந்தைகள், காலையில் எழுந்தவுடன் செய்யும் வேலைகளை இது கற்றுக்கொடுக்கும். பல் துலக்குவது, குளிப்பது, சாப்பிடுவது, கைகழுவுவது என ஒவ்வொரு நடவடிக்கையும் குறிப்பிட்ட நேரத்தில் முடித்தால் புள்ளிகள் கிடைப்பதோடு, இறுதியாக அதற்கான சான்றிதழையும் தருகிறது. இந்த ஆப்பின் மூலமாகக் குழந்தைகளுக்கு நேர மேலாண்மை பற்றிய புரிதலும் ஏற்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.evoprox.morningroutines&hl=en

தமிழ் விடுகதைகள் 

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!

குழந்தைகளிடையே மறந்துபோன விடுகதைகளைக் கேட்கும் பழக்கத்தை மீண்டும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த உதவும் ஆப். இதன் மூலமாக அவர்களின் யோசிக்கும் திறனையும் மேம்படுத்தலாம்; மற்றவர்களிடம் உரையாடும் பழக்கத்தையும் அதிகரிக்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=radian.infosystems.tamilvidukathai

கேட்ஜெட்ஸ்

சுட்டிகளுக்கான கேம்ஸ் கேட்ஜெட்ஸ்!

ரோபோட்டிக்ஸ் கிட்: இன்றைய தலைமுறை, குழந்தைகளுக்கு ரோபோக்கள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதை ஊக்குவிக்கும் விதமாகப் பல ரோபோட்டிக்ஸ் கிட்கள் கிடைக்கின்றன. இதன் மூலமாகப் புதிய வடிவங்களிலான ரோபோக்களைக் குழந்தைகளே சொந்தமாக உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். 1,000 ரூபாய் விலையில், இந்த வகையான கிட்கள் அனைத்தும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலேயே கிடைக்கின்றன.

கிட்ஸ் டேப்லெட்:
நிஜ டேப்லெட் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில், குழந்தைகளுக்குத் தேவையான பாடல்கள், வார்த்தைகளைக் கற்றல், அடிப்படைக் கணிதம் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் டேப்லெட் கேட்டு அடம்பிடிக்கிறார்களா? கொடுத்தால் உடைத்துவிடுவார்கள் என்று பயமாக இருந்தால், கிட்ஸ் டேப்லெட் வாங்கித் தரலாம். 300 ரூபாய் முதல் சந்தையில் கிடைக்கும்.