
கற்பனையைத் தூண்டும் சுட்டி க்ரியேஷன்ஸ்!

சுட்டி விகடன் சார்பில் பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனையும் கற்பனைத்திறனையும் வளர்ப்பதற்காக சுட்டி க்ரியேஷன்ஸ் உருவாக்கும் போட்டிகள் நடைபெற்றன.

பரமக்குடி, லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 800-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சுட்டி க்ரியேஷனை உருவாக்கி மகிழ்ந்தனர். மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் சுட்டி க்ரியேஷனை மிகவும் சிறப்பாக உருவாக்கி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே மூன்று பரிசுகளும், கூடுதலாக மூன்று மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளாக புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இதேபோல, சென்னை கொடுங்கையூர், வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் க்ரியேஷன்ஸ் உருவாக்கும் போட்டியில் பங்கேற்றனர். சுட்டி க்ரியேஷனை மிகவும் சிறப்பாக உருவாக்கி, முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. சுட்டி க்ரியேஷன்ஸ் உருவாக்கும் போட்டி நடைபெற ஆதரவு அளித்த பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மனம் நிறைந்த மகிழ்வை ஒவ்வொரு சுட்டியின் முகத்திலும் காண முடிந்தது.
படங்கள்: க.விக்னேஷ்வரன், அ.சரண்குமார்
உங்கள் பள்ளியில் சுட்டி க்ரியேஷன்ஸ் உருவாக்கும் போட்டி நடத்த வேண்டுமா? தொடர்புக்கு:
சென்னை மண்டலம் # 87544 84988, 96777 14667 வேலூர், புதுச்சேரி மண்டலம் # 97899 77842 திருச்சி, தஞ்சாவூர் மண்டலம் 9791021600 மதுரை, நெல்லை மண்டலம் # 97910 21600 கோயம்புத்தூர் மண்டலம் # 98404 90338 சேலம், ஈரோடு மண்டலம் # 97899 77848