FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

303 நாட் அவுட்!

303 நாட் அவுட்!
பிரீமியம் ஸ்டோரி
News
303 நாட் அவுட்!

தா.ரமேஷ்

னது முதல் சதத்தையே முச்சதமாக அடித்து, உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் கருண் நாயர்.

303 நாட் அவுட்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. இந்திய வீரர்களில் வீரேந்திர சேவாக் மட்டுமே முச்சதம் (309, 319) அடித்திருந்தார். அந்த அதிரடி மன்னனின் சாதனையை, தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே தொட்டுவிட்டது இந்த சிங்கக்குட்டி. யார் இந்த கருண் நாயர்?

கேரளாவைச் சேர்ந்த கருண் நாயர், எட்டு மாதத்திலேயே பிறந்ததால், அவரது நுரையீரல் பலவீனமாக இருந்தது. இதனால், விளையாட்டில் அதிக கவனம் செலுத்துமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். கருண் நாயருக்கும் கிரிக்கெட் என்றால், சாப்பாடே வேண்டாம் என்கிற அளவுக்கு ஆர்வம்.

10 வயதில் கர்நாடகாவின் அண்டர்-13 அணியில்  இடம்பிடித்தார். படிப்படியாக, ரஞ்சி போட்டிகளில் பங்கேற்றார். 2015-ம் ஆண்டு ரஞ்சி இறுதிப் போட்டியில் அவர் இருந்த கர்நாடகா அணி, தமிழக அணியுடன் மோதியது. 84/5 என்ற நிலையில் தத்தளித்தது கர்நாடக அணி. ராகுலுடன் இணைந்த கருண் நாயர், மொத்த போட்டியையும் மாற்றிவிட்டார். அந்தப் போட்டியில் அவர் எடுத்த ரன்கள் 328. ஆக, முச்சதம் என்பது அவருக்குப் புதிதல்ல.

உள்ளூர் போட்டிகளில் இவர் புரிந்த சாதனைகள், ராகுல் டிராவிட் கவனத்தை ஈர்த்தது. ராஜஸ்தான் அணி (ஐ.பி.எல்), இந்திய ஒருநாள் அணி என முன்னேறினார். இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இவர் எடுத்த 303 ரன்கள் காலத்துக்கும் நின்று பேசும்.

கடந்த ஜூலை மாதம் கேரளாவின் சொந்த ஊரில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி, மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்தவர் கருண் நாயர்.

பொதுவாக, கருண் நாயர் விளையாடும் போட்டிகளை அவர் தாய் பிரேமா மைதானத்துக்குச் சென்று பார்க்க மாட்டாராம். ‘நான் பார்த்தால் அவுட்டாகிவிடுவான்’ என்பது அவரது பயம். ஆனால், சென்னை போட்டியைப் பார்க்க  நேரில் வந்திருந்தார். தனது முச்சதம் மூலம் தாயின் சென்டிமென்ட் பயத்தைப் போக்கி, சந்தோஷப்படுத்திவிட்டார் கருண் நாயர்.