FA பக்கங்கள்
Published:Updated:

பெரிய்ய்ய்ய ஃபிரண்ட்ஸ்!

பெரிய்ய்ய்ய ஃபிரண்ட்ஸ்!

ம்மோடு படிக்கிற, நம் வயசு இருக்கிறவங்களோடு மட்டும்தான் ஃப்ரெண்ட்ஸா பழக முடியுமா? எங்களுக்குப் பெரிய பெரிய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க’’ என்கிறார்கள் இந்தச் சுட்டிகள். யார் அந்தப் பெரிய்ய்ய்ய ஃப்ரெண்ட்ஸ்?

‘‘அவுட்... அவுட்... புடிச்சுட்டேன்..!” என மொட்டைமாடியில் தனது அப்பாவோடு ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தான் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரசாந்த்.

பெரிய்ய்ய்ய ஃபிரண்ட்ஸ்!

‘‘என் அப்பாதான் என்னோட ஃபர்ஸ்ட் அண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட். ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கிட்டே கத்துட்டு வர்ற புதுப்புது விளையாட்டுகளை  எல்லாம் அப்பாவுக்குச் சொல்லித் தருவேன். அவரும் சின்ன வயசுல விளையாடின விளையாட்டுக் களை எனக்குச் சொல்லித் தருவார். முக்கியமா, அப்பாவோடு ஓடிப் பிடிச்சு விளையாடறதுன்னா எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அதுல அவரை ஈஸியா ஜெயிச்சுடலாம். இந்தத் தொப்பையை வெச்சுக்கிட்டு அவரால ஓட முடியாதுல்ல” என்று அப்பாவின் தொப்பையைத் தடவியபடி சிரிக்கிறான் பிரசாந்த்.

ஒரு குட்டீஸ் வீட்டு கிச்சனில் ‘கடமுடா’ என பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. பூனை புகுந்துடுச்சா... இல்லே யானை புகுந்துடுச்சா என எட்டிப் பார்த்தால், அம்மாவோடு கரண்டி சண்டை போட்டுக்கொண்டிருந்தார் மூன்றாம் வகுப்பில் படிக்கும் ஷிவானி.

பெரிய்ய்ய்ய ஃபிரண்ட்ஸ்!

‘‘பின்னே என்ன அங்கிள், தோசை சுடலாம்னு ஆசையா வந்தால், அம்மா விட மாட்டேங்கிறாங்க. எனக்கு வட்டமா சுடத் தெரியலையாம். தோசைன்னா வட்டமாத்தான் இருக்கணுமா... ஏன்? சதுரம், செவ்வகம், முக்கோணமா இருந்தா என்னவாம்? ஒரே தோசையை நாலு துண்டா எடுத்து, சாப்பிடறவங் களுக்கு வேலையை மிச்சப்படுத்தினா தப்பா? அது தான் விவாதம் பண்ணிட்டு இருக்கேன். என் அம்மாகிட்டே இப்படித்தான் நிறையக் கேள்வி கேட்பேன். அவங்களும் பதில் சொல்வாங்க. சில சமயம் டென்ஷனாகி இப்படி லைட்டா சண்டை போட்டுப்போம். நீங்க பயப்படாதீங்க. நான் சுட்ட செவ்வக தோசையை டேஸ்ட் பண்றீங்களா?’’ எனக் கேட்க, எஸ்கேப் ஆனோம்.

பெரிய்ய்ய்ய ஃபிரண்ட்ஸ்!

சமர்த்தாக தாத்தாவோடு உட்கார்ந்து எதையோ படித்துகொண்டிருந்த ஆறாம் வகுப்பு விஷ்வா, “நானும் தாத்தாவும் செம தோஸ்த். இது அவரோடு டைரி. தினமும் அவர் என்ன எழுதினார்்னு எனக்குப் படிச்சுக் காட்டுவார், நிறையக் கதைகள் சொல்வார். லீவு நாளில் ரெண்டு பேரும் மாடியில் ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சோம்னா, நேரம் போறதே தெரியாது. எத்தனை கோல் போடுறோமோ, அத்தனை சாக்லேட் வாங்கிக் கொடுக்கிறது எங்களோட டீல். இன்னிக்கு எனக்கு ஏழு சாக்லேட் வாங்கிக் கொடுத்தார் என் செல்லத் தாத்தா” என்று தாத்தாவை அணைத்துக்கொண்டு சிரிக்கிறார்.


- பி.நிர்மல் படங்கள்: ஜெ.விக்னேஷ்