"என் வாழ்க்கையை மாற்றிய பிரெய்ன் கேம்ஸ்!"
"‘சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்’ என்ற இந்தியாவின் மாபெரும் ஆன்லைன் அறிவுத்திறன் போட்டியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பங்கேற்று வெற்றிபெற்று, நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றவர், கடலூர் மாணவி லக்ஷயா விஜய். இந்த விளையாட்டு குறித்துப் பேசும்போதே முகத்தில் உற்சாகம் நயாகராவாகப் பொங்குகிறது.

“ஸ்கில் ஏஞ்சல்ஸ் பிரெய்ன் கேமை முதன்முதல்ல எப்போ விளையாடினீங்க?”
“பாண்டிச்சேரியில் ப்ளஸ் ஒன் படிச்சுட்டு இருக்கும்போது, இந்த ஸ்கில் ஏஞ்சல்ஸ் ஆன்லைன் அறிவுத்திறன் போட்டி பற்றி கேள்விப்பட்டேன். எனக்கு கம்ப்யூட்டரில் விளையாடும் பிரெய்ன் கேம்னா ரொம்பப் பிடிக்கும். அது, அறிவு சார்ந்ததாகவும் இருப்பதால் டபுள் உற்சாகம். விடுவேனா...அப்பாகிட்ட சொல்லி, போட்டியில் கலந்துக்கிட்டேன். முதல் பரிசாக நாசா போறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு.’’
“இந்த பிரெய்ன் கேம்ஸ் அப்படி என்ன ஸ்பெஷல்?’’்
“நிறைய சொல்லலாம். ஒவ்வொரு நாளும் புதுப்புது கேம்கள் வரும். அதுவும் குறிப்பிட்ட நேரம் வரைதான் விளையாட முடியும். கம்ப்யூட்டர் கேம் விளையாட உட்கார்ந்தாலே, முறைச்சுப் பார்க்கும் அப்பாவும் அம்மாவும், ஸ்கில் ஏஞ்சல்ஸ் கேமைப் பார்த்த பிறகு செம என்கரேஜ் பண்ணாங்க.’’
“இந்த கேம் விளையாடியது உங்களுக்கு எந்த வகையில் பயன்படுது?”
‘‘Memory விளையாட்டு மூலம், என்னுடைய ஸ்கூல் சப்ஜெக்ட்களில் நல்ல மார்க்ஸ் எடுக்கிறேன். Problem solving விளையாட்டுக்களால், பல விஷயங்களில் வேகமாக முடிவெடுக்கும் திறன் வளர்ந்திருக்கு. Focus and Attention விளையாட்டால், கவனச்சிதறல் பிரச்னை என்னைவிட்டு ஓடிப்போச்சு. Linguistics கேம்ஸ், என் ஆங்கில அறிவை மேம்படுத்தி இருக்கு. Visual Processing கேம் மூலமா விஷயங்களைப் பகுப்பாய்வு செய்யக் கத்துக்கிட்டேன்.’’
“புதிதாக இந்த பிரெய்ன் கேம் விளையாட நினைக்கும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?”
‘‘வாழ்க்கையில ஜெயிக்க நினைக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் இந்தப் போட்டியில் கலந்துக்கிறது, அவங்க வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற உதவும். போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், பல வகைத் திறன்களை வளர்த்துக்க, பல சிறப்பு வகுப்புகளுக்குப் போறாங்க. இந்த ஸ்கில் ஏஞ்சல்ஸ் பிரெய்ன் கேம்ஸ் விளையாட்டு மூலமா அந்த அறிவுத்திறனை ஈஸியா டெவலப் பண்ண முடியும். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா மாணவர்களுக்கும் ஆல் தி பெஸ்ட்!”
எட்சிக்ஸ் பிரெய்ன் லேப் (EdSix Brain Lab Pvt Ltd) நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்று, ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்.’ மாணவர்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு சென்னை ஐ.ஐ.டி-யின் RTBI பிரிவின் உறுதுணையோடு உருவாக்கப்பட்டது. Village Capital USA மற்றும் IIM Ahmedabad’s CIIE ஆகியவற்றின் ஆதரவுபெற்றது.

எட்சிக்ஸ் பிரெய்ன் லேப் நிறுவனம் நடத்தும் ‘சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்’ (Super Brain Challenge) மாபெரும் ஆன்லைன் அறிவுத்திறன் போட்டி, 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
‘சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்’ போட்டியின் விவரங்கள் மற்றும் பதிவுக்கு www.vikatan.com/SuperBrainChallenge