FA பக்கங்கள்
Published:Updated:

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

ஸ்கூல் லக... லக...

ல்லா ஸ்கூலிலும் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாணவன் இருப்பான். கிளாஸ் ரூமில் நுழையும் டீச்சர்ஸ், ‘இன்னிக்கு இவனை எப்படி சமாளிக்கலாம்?’னு யோசிப்பாங்க. அதே மாதிரி, ‘என்ன வாய் இது... ஓயவே ஓயாதா?’னு நொந்துக்கிற அளவுக்கு அரட்டை அடிக்கும் மாணவியும் இருப்பார். யார் யாரோ, எது எதுக்கோ போட்டி நடத்தி பட்டம் தர்றாங்க. இவங்களுக்கு நாம ஏன் சேட்டை ராஜா, அரட்டை ராணி பட்டம் தரக் கூடாது?

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

சென்னை, ஆலந்தூரில் இருக்கும் ஏ.ஜி.எஸ் நிதி மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பில் விஷயத்தைச் சொன்னதும், 10 லிட்டர் எனர்ஜி டிரிங்க்ஸை ஒரே மூச்சில் குடிச்ச மாதிரி எல்லோருக்கும் செம குஷி.

முதல் கட்டத் தேர்வாளராக மாறிய வகுப்பு ஆசிரியர், “யார் எல்லாம் இந்தப் போட்டியில் கலந்துக்கப்போற வேட்பாளர்கள்? கையைத் தூக்குங்க”னு சொல்லி முடிக்கலை,  ஒட்டகச்சிவிங்கிகள் தலையைத் தூக்கின மாதிரி ஏழெட்டுக் கைகள், மேலே வந்துச்சு.

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

“நேத்து வரைக்கும் ‘கிளாஸ்ல யார் சத்தம் போட்டது?’னு கேட்டால், ‘இந்தப் பூனைங்க பாலே குடிக்காது’ மாதிரி போஸ் கொடுத்த பசங்கதானே நீங்க? இருக்கட்டும்... இருக்கட்டும். நோட் பண்ணிக்கிறேன்’’னு ஆசிரியர் சொல்ல, நம்ம வேட்பாளர்கள் கொஞ்சமும் அசரலையே.

‘‘மத்தவங்கதான் வாக்காளர்கள். இவங்க அடிச்ச அரட்டை, சேட்டை உங்க ஞாபகத்துல இருக்கும். ஒவ்வொருத்தர் பேரைச் சொன்னதும் கையைத் தூக்கி, சேட்டை ராஜா, அரட்டை ராணிக்கான ஓட்டு போடணும்” என்றோம்.

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

‘‘சார், பிரச்சாரம் பண்ணி வாக்காளர்கிட்டே ஆதரவு திரட்ட டைம் கொடுங்க. அன்பு மக்களே, முதல் நாள் பார்த்த சினிமாவை அடுத்த நாளே, டைட்டிலில் ஆரம்பிச்சு எண்டிங் வரைக்கும் சொல்லும் எனக்கே ஓட்டு போடுங்க” ‌என வேட்பாளர் மோனிகா சவுண்டு கொடுத்தார்.

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

‘‘இவங்க, கதைதான் சொல்வாங்க. நான் அதுல வர்ற பாட்டைப் பாடி, டான்ஸ் ஆடி, சினிமா தியேட்டரில் இருக்கிற ஃபீல் கொடுத்ததை மறந்துடாதீங்க மகா ஜனங்களே” என்றார், இன்னொரு போட்டியாளர் மணிகண்டன்.

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

‘‘டென்த் சி செக்‌ஷன்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டீச்சர்ஸ்கிட்டே யாரெல்லாம் பல்பு வாங்கினாங்கன்னு இங்கே இருந்தே உடனுக்குடன் சொல்றது நான்தானே” என்று ஓட்டு போடுபவர்களின் மனதை டச் செய்தார் ஆஜிரா.

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

ஆண்டனி சாம்சங் இருதயராஜ் என முழம் நீளத்துக்கு பேர் வெச்சுட்டிருந்த வேட்பாளர், “டியர் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்... கணக்கு டீச்சர், மூக்குக் கண்ணாடியை எப்படி சரி செய்வாங்க. சயின்ஸ் சாருக்கு டென்ஷன் வந்தா... எப்படி முறைப்பார்னு எவ்வளவோ பண்ணின என்னை ஆதரிக்கலைனா, அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது” என அன்பாக(?)ப் பேசினார்.

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

ஒவ்வொருவரும் பேசி முடிச்சதும், வாக்காளர்களிடம் ஆரவாரம். கடைசியில், ஓட்டு எடுக்கும் வேலை நடந்தது. அதில் அதிகமான வாக்குகள் வாங்கி, சேட்டை ராஜா பட்டம் வாங்கினார் ஆண்டனி சாம்சங் இருதயராஜ். அரட்டை ராணியாகத் தேர்வானார் ஆஜிரா.

சேட்டை ராஜா... அரட்டை ராணி!

உற்சாகம் அடைந்த தோழர்களும் தோழிகளும் அவங்களைத் தூக்கிக்கிட்டு ஊர்வலம் போனாங்க.

சேட்டை ராஜா, அரட்டை ராணி முகங்கள், உலகத்துக்கே அதிபர் ஆனது மாதிரி மின்னியது.

- கே.யுவராஜன் படங்கள்: எம்.உசேன்