# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #
print A+     A-
இராணி கோப்பை: இந்தியா ஏ, இந்தியா பி, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிப்பு!
Posted Date : 16:09 (10/09/2012)Last updated : 16:09 (10/09/2012)

##~##
மும்பை: இராணி கோப்பை மற்றும் சால்வி சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய ஏ, இந்திய பி, ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு இளம் வீரர் புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி விவரங்கள்: சட்டீஸ்வார் புஜாரா, முரளி விஜய், அஜிங்கியா ராஹானே, சுப்ரமணிய பத்ரிநாத், தினேஷ் கார்த்திக், விர்த்திமான் சாஹா, யூசப் பதான், நமன் ஓஜா, பர்விந்தர் ஆவானா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷேகர் தவான், ஸ்டூவார்ட் பின்னி, அபிமன்யூ மிதூன், ஹார்மித் சிங். ஹார்மித் சிங் 19வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் திறமையாக பந்து வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு தமிழக வீரர் சுப்ரமணிய பத்ரிநாத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஏ அணி விவரங்கள்: சுப்ரமணிய பத்ரிநாத், அஜிங்கியா ராஹனே, ஷேகர் தவான், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், மனீஸ் பாண்டே, யூசப் பதான், இஷாந்த் சர்மா, பர்விந்தர் ஆவானா, அபிமன்யூ மிதூன், பிரஜன் ஓஜா, இக்பால் அப்துல்லா, ஹர்ஷல் பட்டேல், உதித் பிர்லா.

இதே போல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடரில் கலக்கிய தமிழக வீரரும், தமிழக ஆல்ரவுண்டருமான பாபா அப்ரஜித், பஞ்சாப் வீரர் சந்தீப் சர்மா ஆகியோரும் இந்தியா பி அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கும் புஜாராவே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பி அணி விவரங்கள்: சட்டீஸ்வார் புஜாரா, முரள் விஜய், ஸ்ரீகாந்த் அனிருத்தா, கீதர் ஜாதவ், ராபின் பிஸ்ட், ஸ்டுவார்ட் பின்னி, ரவீந்திர ஜடேஜா, பாபா அப்ரஜித், பிரவிண் குமார், உமேஷ் யாதவ், முனாப் பட்டேல், ஹார்மித் சிங், ரோஹித் மோட்வானி, சந்தீப் சர்மா.

19வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் திறமையுடன் விளையாடிய கேப்டன் உன்முகுத் சந்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் டெல்லி அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் பிரவீண்குமார் ஆகியோர் இந்த அணி தேர்வில் அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.

இராணிக் கோப்பை தொடரில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பங்கேற்கும் போட்டி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. முன்னதாக இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மைதானம் சரியில்லாத காரணத்தால் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறந்த மைதானமாக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ப்பூர் மைதானம், ராஜஸ்தான் கிரிக்கெட் வாரித்திற்கும், மாநில கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே எழுந்த மோதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்