சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #
print A+     A-
மல்யுத்ததில் யோகேஷ்வர் வெண்கலம்... இந்தியாவுக்கு 5-வது பதக்கம்!
Posted Date : 06:08 (12/08/2012)Last updated : 11:08 (23/08/2012)

ஒலிம்பிக் ஆடவர் 60 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனுடன், லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களில் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிஜீங் ஒலிம்பிக்கில் வென்ற 3 பதக்கங்கள்தான் இதுவரை அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஒலிம்பிக்கில் இதுவரை ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

மல்யுத்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறிய யோகேஷ்வர், அந்தச் சுற்றில் 3-1 என்ற கணக்கில் ரஷ்யாவின் கோவ் பெஸிக்கிடம் தோல்வி கண்டார்.

எனினும், ரெபிசாஜ் முறையில் வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. (ரெபிசாஜ் வாய்ப்பு என்பது, காலிறுதி, முந்தைய சுற்றுகளில் ஒருவரை வீழ்த்திய வீரர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால்,  அவரிடம் தோற்ற வீரருக்கு வெண்கலத்துக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பதாகும்.)

அவ்வாறு வழங்கப்பட்ட ரெபிசாஜ் வாய்ப்பில், தொடர்ச்சியாக மூன்று வீரர்களை அடுத்தடுத்து அட்டகாசமாக வீழ்த்திய யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இவர் ஹரியானாவைச் சேர்ந்தவராவார்.

இந்த போட்டியின் இறுதி செட்டின் எதிரணி வீரரை யோகேஷ்வர் சுழற்றி சுழற்றி திருப்பிய அந்த அருமையான காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும். அவ்வளவு அழகு!

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 3-வது பதக்கம் இது. 1952-ல் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கஷபா தாதாசாஹேப் ஜாதவ் வெண்கலம் வென்றார். பின்னர் பீஜிங்கில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சுஷில் குமார் வெண்கலம் வென்றார். அதன்பிறகு இப்போது யோகேஷ்வர் வெண்கலம் வென்றுள்ளார்.

பீஜிங்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார் லண்டனில் ஞாயிற்றுக்கிழமை களம் காண்கிறார்.

யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்ற தருணம் உங்கள் பார்வைக்கு:-

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
Ramany9 Months ago
Hi Yokesh., good job you did. Proud of you, young man. Greetings to all your coaches., selection committee and your beloved parents and fans... -
Displaying 1 - 1 of 1