
லண்டன்: ஒலிம்பிக் ஹாக்கியில் 11வது இடத்திற்கான போட்டியிலும் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கி தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துவந்த நிலையில் இன்று 11வது இடத்திற்கான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை தென் ஆப்ரிக்காவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.
இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இந்திய அணி கடைசி இடமான 12வது இடத்தை பெற்றது.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி பெற்ற மோசமான தொடர் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.