# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #
print A+     A-
பரிசு மழையில் மேரி கோம்!
Posted Date : 11:08 (11/08/2012)Last updated : 11:08 (23/08/2012)

புது டெல்லி: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோமுக்கு பரிசு மழை கொட்டத் தொடங்கியுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோமுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய பழங்குடியினத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பழங்குடியினத் துறை அமைச்சகம் சார்பில் மேரி கோமுக்கு வரும் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

அதில் அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்தவரான மேரி கோமுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் 2 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.

இப்போது மணிப்பூர் மாநில காவல் துறையில் பணியாற்றி வரும் அவருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வும் அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்