# தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #
print A+     A-
கால்பந்து: அமெரிக்கா ஹாட்ரிக் தங்கம்!
Posted Date : 11:08 (11/08/2012)Last updated : 11:08 (23/08/2012)

லண்டன்: ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டியில் அமெரிக்கா தங்கம் வென்றது. இதன்மூலம் தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது அமெரிக்க அணி. கடைசி 5 ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க அணி வென்றுள்ள 4-வது தங்கப் பதக்கம் இது.

வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 2-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதனால் ஜப்பானுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

அமெரிக்க வீராங்கனை கார்லி லாய்ட் இரு கோல்களை அடித்து அமெரிக்க அணிக்கு வெற்றி தேடித்தந்தார். வெம்ப்ளே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளுமே அபாரமாக ஆடினாலும், ஆட்டத்தின் 8-வது நிமிடத்திலேயே அமெரிக்காவின் கார்லி லாய்ட் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் அமெரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு மேலும் ஓர் கோல் கிடைத்தது.

58-வது நிமிடத்தில் கிடைத்த இந்தக் கோலையும் லாய்ட்டே அடித்தார். அடுத்த 5-வது நிமிடத்தில் (63-வது நிமிடம்) ஜப்பானின் யூகி ஒஜிமி கோலடித்தார்.

இருப்பினும் ஜப்பானின் தோல்வி தவிர்க்க முடியாததானது. இறுதியில் அமெரிக்கா 2-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது அமெரிக்கா. உலகக் கோப்பை போட்டியில் ஜப்பானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை வீணடித்த லாய்ட், இந்த முறை இரு கோல் அடித்து அமெரிக்காவுக்கு வெற்றி தேடித்தந்து ஆறுதல் தேடிக்கொண்டார். கனடா அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

அமெரிக்க அணி தங்கம் வென்றதற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்