# கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் # காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி # சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #
print A+     A-
த்ரில் வெற்றி: குத்துச்சண்டை காலிறுதியில் விஜேந்தர் சிங்!
Posted Date : 07:08 (03/08/2012)Last updated : 12:08 (23/08/2012)

இந்தியக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ஒலிம்பிக் ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்குத் தகுதிபெற்றார்.

மிகவும் பரபரப்பான ஆட்டத்தில், ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் டெர்ரெல் கவுஷாவை வீழ்த்தினார் விஜேந்தர்.

பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் 16-15 என்ற புள்ளிக் கணக்கில் கவுஷாவை வீழ்த்தியது த்ரில் வெற்றியாக இருந்தது.

'இந்தியா... இந்தியா...' என்ற ரசிகர்களின் உற்சாகக் குரல்களுக்கு இடையே முதல் சுற்றில் ஒரு புள்ளி முன்னிலை வகித்தார், விஜேந்தர். இரண்டாவதுச் சுற்றில் இருவருமே சமமான புள்ளிகளை எடுத்தனர். விஜேந்தரின் 'குத்து' உத்தியாலும், விவேகம் கலந்த வேகத்தாலும் கடைசிச் சுற்றும் சமநிலை ஆனது. முடிவில் விஜேந்தருக்கே வெற்றி.

விஜேந்தரின் கையை ரெஃப்ரி உயர்த்தியபோது மகிழ்ந்த ரசிகர்கள், "இந்தியா வென்றது..." என்று உற்சாகக் கோஷமெழுப்பினர்.

இந்த வெற்றியால் ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதற்கான வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக்கொண்டார், விஜேந்தர் சிங்!

முன்னாள் நம்பர் 1 வீரரான விஜேந்தர் தனது காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் அப்பாஸ் அட்டோவை சந்திக்கிறார். அட்டோவ் தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ரஷ்யாவின் போக்டன் ஜுரடோனியை 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்