ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிட்டன் அரையிறுதிக்கு, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறி, புதிய சாதனை படைத்தார்.
.jpg)
இந்திய பேட்மிட்டன் வரலாற்றில், ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆட்டக்காரர் என்ற சரித்திரச் சாதனையைப் பதிவு செய்தார் சாய்னா.
சாய்னா நேவால் தனது காலிறுதிச் சுற்றில் டென்மார்க்கின் டினே பாவுனை 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றிய சாய்னா, இரண்டாம் செட்டில் சற்று கடினமானச் சூழலைச் சந்தித்தார். சாய்னா 18 பாயின்டுகள் இருந்தபோது, டினே 20 பாயின்டுகள் இருந்தார். அப்போது, தன் ஆக்ரோஷமான ஆட்டத்தால் தொடர்ந்து வெற்றிப் புள்ளிகளை வசப்படுத்தி அந்த செட்டையும் அபாரமாகக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பைப் பிரகாசப்படுத்தி இருக்கிறார், சாய்னா நேவால்.